டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை தாமதப்படுத்த விரும்புவதாக தெரிகிறது... சிபிஐ நீதிமன்றம் கோபம்

Google Oneindia Tamil News

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இரண்டு முறை அவகாசம் வழங்கியும் பாதுகாப்பு கவுன்சில் எழுத்து பூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த நீதிபதி, விசாரணையின் முடிவை தாமதப்படுத்தி பாதுகாக்க விரும்புவதாக தெரிகிறது என கடுமையான கருத்தை வெளிப்படுத்தினார்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, அயோத்தியில் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உ.பி. முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார், சாத்வி ரிதாம்பாரா மற்றும் சாக்ஷி மகாராஜ் மற்றும ராம் தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய். உள்ளிட்ட 32 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு இருக்கின்றனர்.

 defence counsel Seems Bent Upon Delaying Babri Mosque Demolition Trial: CBI Court

இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி யாதவ் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். ஆனால் வழக்கு விசாரணையை அவரே முடிக்க வேண்டும் என்று விரும்பிய உச்சநீதிமன்றம், உத்தர பிரதேச மாநில அரசுக்கு ஒரு கோரிக்கை முன்வைத்தது. இதன்படி நீதிபதியின் பதவி காலம் 9 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதிக்கு வழக்கில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றம், இரண்டு முறை அவகாசம் வழங்கிய போதிலும், பாதுகாப்பு ஆலோசகர் தரப்பு, எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறினார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி யாதவ் ,ந்தைய இரண்டு சந்தர்ப்பங்களில் அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அதன் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், விசாரணையின் முடிவை தாமதப்படுத்தி பாதுகாப்பு விரும்புவதாக தெரிகிறது என்று கடுமையான கருத்தை வெளிப்படுத்தினார்.

காஷ்மீர் பாணியில் தமிழகத்தில் நிலைமை மாறும்.. பாஜக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது.. ஹெச் ராஜாகாஷ்மீர் பாணியில் தமிழகத்தில் நிலைமை மாறும்.. பாஜக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது.. ஹெச் ராஜா

தனது கோபத்தை வெளிப்படுத்தியதுடன், நீதிபதி எஸ்கே யாதவ், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்குமாறு பாதுகாப்பு தரப்பு வாதத்தை நிராகரித்தார், வியாழக்கிழமைக்குள் (இன்றைக்குள்) அதைத் தாக்கல் செய்வதை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார். முன்னதாக ஆகஸ்ட் 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நீதிமன்றம் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி இருந்தது. ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை

அரசு தரப்பில் சிபிஐ ஏற்கனவே 400 பக்க எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு செப்டம்பர் 30ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதால் விசாரணை, நடவடிக்கைகளை நீதிமன்றம் விரைவுபடுத்தியுள்ளது. இந்நிலையில். தீர்ப்பை எழுதும் போது பரிசீலிக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளன என்றும், அதை எழுத கணிசமான நேரம் எடுக்கும் என்றும் நீதிமன்றம் இன்று கூறியது. ஆனால் பாதுகாப்பு துறை மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்டு வழக்கை தாமப்படுத்த விரும்புகிறது என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. பாதுகாப்பு துறை எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்தால் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்..

English summary
The special CBI court holding the Babri mosque demolition trial on Wednesday expressed its exasperation over the defence counsel's failure to submit their written arguments to the court despite twice being granted time for it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X