டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாமல் படைகளை குவிக்கும் சீனா.. முப்படை தளபதியை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடன் எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் உடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடத்தினார்.

Recommended Video

    எல்லா எல்லையிலும் படைகளை குவித்த China... என்ன நடக்கிறது?

    லடாக்கில் பாங்காங் திசோ பகுதியில் தொடர்ந்து இந்தியா சீனா இடையே சண்டை நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக சீனா இந்தியா இடையே லடாக் எல்லையில் படைகளை குவித்து வந்தது.

    இதையடுத்து இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரியும், சீனாவின் மேஜர் ஜெனரல் அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    4000 கிமீ.. சிக்கிம் முதல் உத்தரகாண்ட் வரை.. எல்லா எல்லையிலும் படைகளை குவித்த சீனா.. பரபரப்பு!4000 கிமீ.. சிக்கிம் முதல் உத்தரகாண்ட் வரை.. எல்லா எல்லையிலும் படைகளை குவித்த சீனா.. பரபரப்பு!

    பின்வாங்கிய படைகள்

    பின்வாங்கிய படைகள்

    இதனால் லடாக்கில் கல்வான் எல்லை பகுதியில் இரண்டு நாட்டு படைகளை 2 கிமீ தூரம் அளவிற்கு பின்வாங்கியது. ஆனால் லடாக் எல்லையில் பிரச்சனை நடந்து வரும் நிலையில் தற்போது சிக்கிம், அருணாசலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் எல்லையில் மிக தீவிரமாக போர் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. 4000 கிமீ தூரத்தில் பல இடங்களில் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சீனாவின் எல்லையில் இப்படி படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.

    பேச்சுவார்த்தை நடத்தினார்

    பேச்சுவார்த்தை நடத்தினார்

    இந்த நிலையில் தற்போது முப்படை தளபதி பிபின் ராவத் உடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடத்தினார். அதேபோல் ராணுவ மேஜர்கள் உடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடத்தினார். லடாக் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தினார்கள். முக்கியமாக சீனாவின் People's Liberation Army எனப்படும் பிஎல்ஏ (PLA) படை குறித்து ராஜ்நாத் சிங் இந்திய வீரர்களிடம் கேட்டறிந்தார்.

    இரண்டாவது மீட்டிங்

    இரண்டாவது மீட்டிங்

    மேஜர்கள் மற்றும் முப்படை தளபதி உடன் ராஜ்நாத் சிங் இரண்டாவது முறையாக இப்படி ஆலோசனை செய்து இருக்கிறார். கடந்த வாரம் மீட்டிங் நடந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் மீண்டும் மீட்டிங் நடந்து உள்ளது. இதனால் எல்லையில் என்ன நடக்கிறது என்று பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராணுவ தளபதி முகுந்த் நரவனே இடம்பெற்று இருந்தார். அதேபோல் விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் இடம் பெற்று இருந்தார்.

    என்ன கேட்டறிந்தார்

    என்ன கேட்டறிந்தார்

    லடாக் எல்லையில் சீன படைகள் எங்கு எல்லாம் இருக்கிறது, எங்கு பின்வாங்கி உள்ளது, எங்கு பின்வாங்கவில்லை என்று ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். அதேபோல் சீனாவின் ஆயுதங்கள் எவ்வளவு குவிக்கப்பட்டு உள்ளது, விமானப்படை ரோந்து பணிகள் எப்படி நடக்கிறது என்று கேட்டறிந்தார். இதனால் எல்லையில் வரும் நாட்களில் என்ன நடக்கும், என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Defense Minister Rajnath Singh holds meeting with CDC amid China deploys more troops in border .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X