அடிச்சாங்கல.. தேடட்டும் சார்! காதலி கொலை.. போலீசை அலறவிட்ட சைக்கோ "அப்தாப்".. மிஸ்ஸாகும் 4 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சாரதா என்ற பெண்ணை அவரின் காதலன் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் போலீசாருக்கு சில முக்கியமான சந்தேகங்கள் நிலவி வருகின்றன. அந்த சந்தேகங்கள் இந்த கொலை வழக்கு விசாரணையில், குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக கொலை வழக்குகளில் 4 விஷயங்கள் முக்கியமானவை. கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை கண்டுபிடிக்க தலை முக்கியம், கொலை செய்யப்பட்ட ஆயுதம், கொலை செய்யப்பட்ட போது குற்றவாளி பயன்படுத்தி உடை, கொலை செய்யப்பட்ட உடலில் கொலையாளியின் அடையாளங்கள் (டிஎன்ஏ, கைரேகை) போன்றவை.

இந்த 4 விஷயங்கள் இல்லாத காரணத்தால் உலகம் முழுக்க பல கேஸ்களில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் ஓஜே சிம்சன் வழக்கில் எல்லாம் கடைசி வரை குற்றவாளியை கண்டுபிடிக்கவே முடியாமல் போனது.

டெல்லி

டெல்லி

டெல்லியில் இப்போது சாரதா கொலை வழக்கிலும் இதே போன்ற முக்கியமான சில விஷயங்கள் மிஸ்ஸாகி உள்ளன. சாரதாவை அவரின் காதலன் அப்தாப் அமீன் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்தார். இந்த கொலை வழக்கில்தான் தற்போது குழப்பங்கள் நிலவி வருகிறது. இதில் கொலையாளி அப்தாப் தனது கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும் வெறுமனே வாக்குமூலங்கள் மட்டும் கொலையாளிக்கு தண்டனையை வாங்கி கொடுக்காது. கொலையை செய்ததை போலீசும் நிரூபிக்க வேண்டும்.

கேஸ் நிற்காது

கேஸ் நிற்காது

இல்லையென்றால் கேஸ் நிற்காது. இந்த கொலை வழக்கில் இதுவரை போலீஸ் கண்டுபிடித்தது என்னென்னவென்று பார்க்கலாம்.

அபிதாப்பின் வாக்குமூலம்.
அப்தாப் புதிதாக வாங்கிய பிரிட்ஜ். அது கைப்பற்றப்பட்டது. அதற்கான பில் கிடைத்துள்ளது. அப்தாப் வாங்கிய கத்தியை பற்றி கடைக்காரர் கொடுத்த வாக்குமூலம். அப்தாப் கையில் கொலையின் போது ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்ட போட்ட மருத்துவர்.

வேறு என்ன கிடைத்தது?

வேறு என்ன கிடைத்தது?

சாரதாவின் சில உடல் பாகங்கள்.
கிச்சனில் ரத்தம் இருந்ததற்கான அடையாளம்.
அப்தாப் சாரதாவின் கணக்கில் இருந்து எடுத்த 54 ஆயிரம் பணம்.
போன் ரெக்கார்ட் ஆதாரங்கள்.
சாரதாவின் பெற்றோர், உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம்.

இன்னும் கிடைக்காத விஷயங்கள்

இன்னும் கிடைக்காத விஷயங்கள்

போலீஸ் விசாரணையில் இன்னும் கிடைக்காத விஷயங்கள் பின்வருமாறு

சாரதாவின் தலை.
சாரதாவின் வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதம்.
சாரதாவின் உடை. கொலைகாரன் அப்தாப்பின் உடை. குப்பை தொட்டியில் போட்டதாக அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான். ஆனால் கண்டுபிடிக்கப்படவில்லை.
சாரதாவின் போன் கண்டுபிடிக்கப்படவில்லை.

முக்கியம்

முக்கியம்

முன்பு சொன்னதை போல, கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை கண்டுபிடிக்க தலை முக்கியம், கொலை செய்யப்பட்ட ஆயுதம், கொலை செய்யப்பட்ட போது குற்றவாளி பயன்படுத்தி உடை ஆகியவை கொலை வழக்கில் மிக முக்கியம். அதில் 3 விஷயங்களை கண்டுபிடிக்க முடியாமல்தான் போலீஸ் திணறி வருகிறது. விலங்கு என்ற தொடரில் கொலைகாரன், என்னை போலீஸ் அடிச்சாங்கல தேடட்டும் சார் என்று போலீசாரை பிணத்தின் தலையை தேட விடுவான். அதேபோல்தான் இந்த வழக்கிலும் கொலைகாரன் அல்தாப் போலீசாரை அலையவிட்டு உள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+