Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியை தாக்க உதவிய செஷன் செயலி.. பெயர் - மொபைல் எண் கூட வேணாம்.. உமர் - துருக்கி ‛உகாசா’ தொடர்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கார் வெடிப்பை நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது உறுதியாகி உள்ளது. அவர் பாகிஸ்தானின் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்நிலையில் தான் பெரிய ட்விஸ்ட்டாக துருக்கிக்கு அவர் சென்று சதிதிட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துருக்கியில் உள்ள ஒருவர் ‛உகாசா' என்ற பெயரில் உமரிடம் நேரடியாக தொடர்பில் இருந்ததும், அவர் தான் தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொடுத்தது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் கிடைத்துள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பை நிகழ்த்தியது ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் என்ற பயங்கரவாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உமர் டாக்டராக பணியாற்றியவர். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் (Al Falah Medical College) டாக்டராக பணியாற்றி வந்தார்.

delhi-bomb-blast-mastermind-who-is-ukasa-in-turkey-how-did-doctor-umar-contact-with-him-via-app

கார் வெடித்ததில் அவர் செத்துப்போன நிலையில் அவனது சதித்திட்டங்கள் பற்றிய அடுத்தடுத்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச பயங்கரவாதியான அசூத் மசாரின் ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே தான் உமரின் செயல்பாடு கடந்த சில மாதங்களாக மாறி உள்ளது. இந்த மாற்றம் என்பது துருக்கி சென்று வந்த பிறகு தான் நடந்துள்ளது. ஃபரிதாபாத் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர் முஜாமில் அமோனியம் நைட்ரேட் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், உமரும் ஒரே பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதால் துருக்கி சென்று வந்துள்ளனர். இருவரின் பாஸ்போர்ட்டும் அதனை உறுதி செய்துள்ளது. அங்குள்ள பயங்கரவாதிகள் தான் இருவருக்கும் தாக்குதல் திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கியும், பாகிஸ்தானும் மிகவும் நெருங்கி பழகி வருகின்றன. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம் நாட்டை துருக்கி எதிர்த்தது. அதோடு பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்களை ஏவி நம் நாட்டை துருக்கி ட்ரோன் ஆபரேட்டர்கள் தாக்கினர். இதனால் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் துருக்கியில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளது.

இப்படியான சூழலில் தான் துருக்கியில் யாருடன் உமர் தொடர்பில் இருந்தான் என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளன. துருக்கியில் ‛உகாசா' (Ukasa) என்பவருடன் உமர் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பில் இருந்துள்ளனர். ‛உகாசா' என்பது அது அந்த நபரின் பெயர் இல்லை. அது Code Word ஆகும். உகாசா என்பதற்கு அரபிமொழியில் Spider என்று பொருள். தமிழில் ‛சிலந்தி'. இந்த நபருடன் உமர் நேரடியாக தொடர்பில் இருந்துள்ளார்.

இவர் உமர் மற்றும் பிற கூட்டாளிகளுடன் Session செயலி மூலமாக தொடர்பில் இருந்துள்ளனர். இது மிகவும் பாதுகாப்பான செயலியாகும். யார் யாரிடம் பேசுகிறார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரியாது. பொதுவாக பல செயலிகளை நாம் டவுன்லோட் செய்து பயன்படுத்தும்போது பெயர், செல்போன் எண், இடம் உள்ளிட்டவற்றை கேட்கும். ஆனால் இந்த செயலியில் அப்படி எதுவும் கொடுக்க வேண்டாம். இதனால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் உமரும், உகாசாவுடன் இந்த செயலி மூலமாக தொடர்பில் இருந்துள்ளார்.

இவர் தான் துருக்கியில் இருந்து பயங்கரவாத செயல்களுக்கு தேவையான பணம், திட்டம் உள்ளிட்டவற்றை வழங்கி ஒருங்கிணைத்து இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? பின்னணி என்ன? என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக துருக்கி அங்காராவாவில் ‛உகாசா' கோட்வேர்ட் நபர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உமர் உள்பட பலரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து துருக்கி சென்று வந்துள்ளனர். குறிப்பாக ஃபரிதாபாத்தை மையப்படுத்தி செயல்பட்டவர்கள் துருக்கி வந்து சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பயங்கரவாதிகளுக்கும், துருக்கியில் உள்ளவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து கண்கணித்துள்ளோம். Session செயலி மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.அவர்களின் உரையாடல் தொடர்பாக தற்போது விசாரைண மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்மூலம் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள அமைப்பு மற்றும் நபர்களை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+