டெல்லி கார் குண்டுவெடிப்பு.. டாக்டர் குழு த*கொ* தாக்குதல்? போலி ஆவணங்களுடன் கார்.. வெளியான உண்மை!
இந்தியாவையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய கார் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வெடிப்பை நடத்தியவர் காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் நபி என விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர் ஒரு தீவிரவாத டாக்டர் குழுவுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் இது ஒரு தற்கொலை தாக்குதலா?எனும் கோணத்தில் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் குண்டு வெடித்த கார் போலி ஆவணங்கள் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.
புகழ்பெற்ற டெல்லி செங்கோட்டை அருகே மிகுந்த பாதுகாப்பு வலையமைப்புடன் இருக்கும் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் மாலை 6.52 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சிக்னலில் நின்றிருந்த ஹூண்டாய் ஐ20 கார் திடீரென வெடித்துச் சிதறியது.

மக்கள் கூட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்த வெடிப்பில் 8 பேர் உடனே உயிரிழந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த 4 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
டெல்லி கார் வெடிப்பு
நாட்டையே இச்சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், டெல்லி போலீசாருடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமை (NIA), தேசிய பாதுகாப்பு படை (NSG), உளவுத்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அரியானா, உத்தரப் பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் 8 பேர் கொண்ட தீவிரவாத நெட்வொர்க் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் டாக்டர்
கைது செய்யப்பட்டவர்களில் மூவரும் டாக்டர்கள் என்பது அதிர்ச்சி தகவலாகும். அவர்கள் 2,900 கிலோ வெடிபொருட்களையும், பல்வேறு ஆயுதங்களையும் பதுக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், காரை ஓட்டியது புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் அரியானாவின் அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தவர்.
தற்கொலை தாக்குதல்
அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் முசம்மில் கனாயி மற்றும் டாக்டர்கள் ஷாஹீன் சயீத், ஆதில் அகமது ஆகியோரும் ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஷாஹீன் சயீத், இந்தியாவில் ஜெய்ஷ் அமைப்பின் பெண்கள் படையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது
இந்த குழுவில் இருந்த உமர் நபி, தன் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், தானும் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் பரிதாபாத்திலிருந்து டெல்லி வந்துள்ளார். அவர் காரை செங்கோட்டை அருகே மூன்று மணி நேரம் நிறுத்தி வைத்திருந்ததும், பின்னர் கார் வெடித்ததும் சிசிடிவி பதிவுகளில் தெளிவாக உள்ளது. விசாரணை குழுவின் தகவல்படி, காரில் அம்மோனியம் நைட்ரேட் இருந்திருக்கலாம். அது தானாகவே வெடித்திருக்கலாம் அல்லது உமர் நபி தற்கொலை தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
என்ஐஏ விசாரணை
வெடித்த காரில் கிடைத்த உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் மொத்தம் ஏழு முறை கைமாறியதாகவும், கடைசியாக புல்வாமாவை சேர்ந்த தாரிக் என்ற நபர் போலி ஆவணங்கள் மூலம் உமர் நபிக்கு காரை விற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தாரிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த தாக்குதலின் பின்னணியில் யார், எந்த தீவிரவாத அமைப்பு இருக்கிறது என்பதை கண்டறிய என்ஐஏ தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications