Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான்யா தீபாவளி போனஸ்.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த டெல்லி நிறுவனம்.. இ-மெயிலில் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் டெல்லியை மையப்படுத்தி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு இ-மெயிலில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தீபாவளிக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கி உள்ள அந்த நிறுவனம், அதுதொடர்பாக அனுப்பிய இ-மெயில் இப்போது கவனம் பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் புத்தாடை வாங்கவும், பட்டாசு வாங்கவும் தயாராகி வருகின்றனர். இந்த முறை தீபாவளி திங்கட்கிழமை வருகிறது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ந்து விடுமுறையை அனுபவிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

delhi-company-gives-9-days-diwali-holiday-to-all-employees

தமிழ்நாட்டில் ஒருநாள் மட்டுமே தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால் கர்நாடகா, ஆந்திரா உள்பட சில வடமாநிலங்களில் 3 நாட்கள் வரை தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. மேலும் பலரும் தீபாவளியையொட்டி தங்களின் குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவழிக்கும் வகையில் மேலும் சில நாட்கள் விடுமுறை எடுக்க தயாராகி வருகின்றனர்.

இப்படியான சூழலில் தான் டெல்லியில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தீபாவளியை கொண்டாட 9 நாட்கள் விடுமுறை வழங்கி உள்ளது. டெல்லியை மையப்படுத்தி தனியாருக்கு சொந்தமான மக்கள்தொடர்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரஜத் குரோவர்.

இந்த ரஜத் குரோவர் தான் தனது அலுவலகத்துக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் முதல் இன்டர்ன்ஷிப் முறையில் வேலை செய்வோர் வரை அனைவருக்கும் இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது:

‛டயட் பிளானை கைவிடும் நேரம் வந்துவிட்டது. எங்கும் உறவினர்கள் சூழ்ந்து இருக்கும் காலம் வந்துவிட்டது. திரும்பும் திசையெங்கும் பட்டாசு சத்தம் கேட்கம் நேரம் வந்துவிட்டது. இதனால் உங்களுக்கு நாங்கள் அக்டோபர் 18 ம் தேதி முதல் அக்டோபர் 26 ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை தருகிறோம். ஆம், நீங்கள் படித்தது சரி தான். 9 முழு நாட்கள் உங்களுக்கு விடுமுறை. இந்த போனஸ் நேரத்தில் உங்களால் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?

delhi-company-gives-9-days-diwali-holiday-to-all-employees

மதியம் வரை நிம்மதியாக தூங்கலாம். ஏனென்றால் அலாரம் வைக்கும் கடிகாரத்துக்கும் இது விடுமுறை தினமாக இருக்கும். குடும்பத்துடன் திரைப்படங்களை வீட்டிலேயே இருந்து ஓடிடி தளங்கில் ரசிக்கலாம். காஜூ கத்திலி அதிகமாக சாப்பிடலாம். இ-மெயில் பார்க்காமல் ஸ்விட்ச்ஆப் செய்யலாம். இதனால் தீபங்கள் ஏற்றி இனிப்புகள் சாப்பிட்டு குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள்.

மீண்டும் அலுவலகம் வரும்போது நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் 2 கிலோ வரை எடை அதிகரித்து இருக்க வேண்டும். 10 மடங்கு சந்தோஷமாக இருக்க வேண்டும். எதிர்கால பணிக்கு தயாராக முழு ரீசார்ஜ் செய்யப்பட்ட நபராக வர வேண்டும். சிரித்த முகத்துடன் பொறுப்புடன் பட்டாசுகளைவெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்'' என கூறப்பட்டுள்ளது. இந்த இ-மெயில் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அந்த நிறுவனத்தின் சிஇஓ ரஜத் குரோவரை பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+