பெண் ரவுடியை திருமணம் செய்த டெல்லியின் பிரபல தாதா.. வரலாறு காணாத பாதுகாப்பு.. யார் இந்த காலா?
டெல்லி: டெல்லியின் பிரபல தாதாவான அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த காலா ஜாதேடிக்கும், டெல்லியைச் சேர்ந்த பெண் ரவுடிக்கும் நேற்று வரலாறு காணாத பாதுகாப்பிற்கு நடுவே திருமணம் நடந்தது. பரோலில் வந்த தாதா காலா ஜாதேடிக், பெண் ரவுடியை திருமணம் செய்திருக்கிறார்.
அரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப்.. இவரை டெல்லியில் காலா ஜாதேடி என்று அழைக்கிறார்கள். 12ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கேபிள் ஆப்ரேட்டராக தனது வாழ்க்யை தொடங்கிய நிலையில், டெல்லியின் பெரிய ரவுடிகளில் ஒருவராக மாறினார்.

டெல்லி மாநகரில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் காலா ஜாதேடி மீது நிலுவையில் உள்ளத,. தொழில் அதிபர்களுக்காக கூலிப்படைகளை வைத்து சிலரை கொலையும் செய்ததாக வழக்குகள் உள்ளது.
இதனிடையே காலா ஜாதேடி டெல்லியில் எப்படி பிரபல ரவுடியோ, அதுபோலவே அனுராதா சவுத்ரி என்ற பெண்ணும் ரவுடித்தொழிலில் அங்கு பிரபலமாக உள்ளார். இவர் மீது பணத்திற்காக ஆட்களை கடத்துவது, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் பெண் ரவுடி ஆனந்த்பால் சிங்கின் சகோதரர் விக்கிசிங்குக்கு உதவுவதற்காக மத்தியபிரதேச மாநிலம் இந்தூருக்கு காலா ஜாதேடி சென்றுள்ளார் அப்போது அனுராதா சவுத்ரியை முதல் முதலாக கலா ஜாதேடி சந்தித்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இதனிடையே இவர்கள் இருவரும் காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த டெல்லி போலீஸ் அவர்களை பிடித்து கைது செய்தது. காலா ஜாதேடி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அனுராதா சவுத்ரியும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் கலா ஜாதேடிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை...
இந்தநிலையில் காலா ஜாதேடி- அனுராதா சவுத்ரி ரவுடி காதல் ஜோடி, திருமணம் செய்ய விரும்பி உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து உரிய சட்ட விதிகளின்படி கோர்ட்டை அணுகியுள்ளார்கள். அதன்பேரில் திருமணத்துக்காக காலா ஜாதேடிக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 6 மணி நேரம் பரோல் அனுமதி வழங்கியது.
முன்னதாக ரவுடி அனுராதா சவுத்ரியின் வழக்கறிஞர்கள், டெல்லி திகார் சிறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் ஒரு மண்டபத்தை திருமணத்திற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர். அங்கு காலா ஜாதேடி- அனுராதா சவுத்ரி ரவுடி காதல் ஜோடியின் திருமணம் நடந்தது.. இந்த திருமணத்திற்கு வரலாறு காணாத பாதுகாப்பு கொடுத்தது டெல்லி போலீஸ். இந்த திருமணத்தில் மொத்தம் 150 பேர் மட்டுமே பங்கேற்றார்கள்.
திருமணம் முடிந்ததும் காலா ஜாதேடி மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இன்றும் (புதன்கிழமை) சடங்கு சம்பிரதாயங்களுக்காக பரோல் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக மனைவியுடன் அவர் தனது சொந்த கிராமமான சோனிபட் ஜத்தேரிக்கு செல்லும் அவர் அதன்பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications