டெல்லி எல்லைகளில் ஓராண்டு நீடித்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது! கூடாரங்கள் அகற்றம்!!
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் ஓராண்டு காலம் தொடர்ந்து நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து டெல்லி எல்லைகளில் தங்களது கூடாரங்களை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அகற்றினர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லி எல்லைகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உ.பி, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் இந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர்.
பஞ்சாப் மாநில விவசாயிகள் வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இடைவிடாமல் இப்போராட்டங்களில் பங்கேற்றனர். கடும் குளிரிலும் பனியிலும் வெயிலும் தொடர்ந்த இந்த போராட்டத்தில் இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர்.

லக்கிம்பூர் படுகொலை
இப்போராட்டங்களின் போது கடந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணி பெரும் வன்முறையில் முடிவடைந்தது. டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் பிரிவினைவாதிகள் கொடி ஏற்றப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இத்தனை இன்னல்களுக்கும் இடையே விவசாயிகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது.

விவசாய சட்டங்கள் வாபஸ்
இந்நிலையில் பிரதமர் மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றபப்ட்டது. இம்மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இறங்கி வந்த மத்திய அரசு
இருந்தபோதும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாகவும் மத்திய அரசு இறங்கி வந்தது. விவசாயிகளை உள்ளடக்கிய குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இது தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அகற்றப்பட்ட கூடாரங்கள்
இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஆலோசனைகளை விவசாயிகள் நடத்தினர். இந்த நிலையில் இன்று டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றனர். முன்னதாக எல்லைகளில் அமைத்திருந்த தங்களது கூடாரங்களை அவர்கள் கலைத்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications