“ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போல.. அதான் இப்படி” - முன்னாள் சிபிஐ இயக்குனருக்கு அபராதம் விதித்த கோர்ட்!
டெல்லி: தனது ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பிரபலங்களின் போலி கணக்குகளை அடையாளம் காணும் நோக்கத்தோடு, அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கி வருகிறது ட்விட்டர்.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக்கை ரத்து செய்த ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த நாகேஸ்வர ராவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

ட்விட்டர் ப்ளூடிக்
சமூக வலைதளமான ட்விட்டரில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் ட்விட்டர் பக்கத்திற்கு, அந்த நிறுவனம் ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கி உண்மையான பக்கம் எனச் சான்றளிக்கிறது. போலி ட்விட்டர் பக்கங்களை அடையாளம் காணவே இந்த ப்ளூ டிக் அங்கீகாரம் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிபிஐ முன்னாள் இயக்குநர்
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ், சி.பி.ஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக இருந்தார். அவருக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால், அவருக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் அங்கீகாரத்தை ட்விட்டர் நிறுவனம் ரத்து செய்தது.
இதனையடுத்து இது குறித்து நாகேஸ்வரராவ் ட்விட்டர் நிறுவனத்திடம் முறையிட்டும் அவருக்கு மீண்டும் ப்ளூடிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் மீண்டும் ட்விட்டரில் ப்ளூடிக் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஐகோர்ட் உத்தரவு
நாகேஸ்வர ராவின் மனுவை விசாரித்த நீதிபதிகள், அவரது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி சில அறிவுறுத்தல்களை ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கினர். ஆனால், அவருக்கு இதுவரை ப்ளூ டிக் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த நாகேஸ்வரராவ் நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு ப்ளூ டிக் வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

அபராதம்
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், நாங்கள் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதிதான் உத்தரவிட்டோம். அதற்குள் நீதிமன்றத்தை நாடுவதற்கான அவசரம் என்ன வந்தது? நாகேஸ்வரராவுக்கு நிறைய நேரம் இருக்கிறது போலும். அதனால் தான் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அவர் எங்களிடம் இருந்து பதில் பரிசை எதிர்ப்பார்க்கிறார். நாங்கள் அவருக்குப் பரிசாக ரூ.10 ஆயிரம் அபராதமும், அவரது மனுவை தள்ளுபடியும் செய்கிறோம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், நாகேஸ்வர ராவ் அதிர்ச்சியடைந்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications