டெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: டெல்லியில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க ராணுவத்தை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி ஹைகோர்ட் நிராகரித்துள்ளது.
Recommended Video
டெல்லி கலவரம் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த ஹைகோர்ட், நிலைமையைக் கண்காணிப்போம், இப்போதைக்கு, ராணுவத்தை டெல்லிக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை, என்று தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், பாஜக தலைவர்கள் பேசிய வெறுப்பு பேச்சுக்கள் அடங்கிய வீடீயோக்களை நீதிமன்றத்தில் ஒளிபரப்பக் கூறியிருந்தார். அதைப்பார்த்த பிறகு, அவர் கூறுகையில், எல்லா வீடியோக்களிலும் ஒரே மாதிரி கோஷங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன என்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது. காவல்துறை இதுதொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. இது ஒரு தவறான மெசேஜை மக்களிடம் கொண்டு செல்லும். இந்த முழக்கத்தை மீண்டும் பலரும் பயன்படுத்துவதை தடுக்காது. எனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு நீங்கள் எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்திருக்கும்போது, இந்த உரைகளுக்கு எதிராக ஏன் அதை பதிவு செய்யவில்லை? இதில் ஒரு குற்றம் இருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள விரும்பவில்லையா? இவ்வாறு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
மேலும் நீதிபதி கூறுகையில், எங்கள் கவலை என்னவென்றால், அரசியலமைப்பு நீதிமன்றமாக நாங்கள் இருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதை அறியாமல் கண்மூடித்தனமாக இருக்க முடியாது என்றார்.
மேலும், அரசு வக்கீலான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம்,"நீங்கள் எப்ஐஆர் பதிவு செய்ய எது பொருத்தமான நேரம் என்று நினைக்கிறீர்கள்? ஒரு வழக்கை பதிவு செய்வதற்கு முன்பு எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? நீங்கள் எப்போது எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வீர்கள்? நகரம் முழுவதும் எரிந்த பிறகா? காவல்துறை என்றால் என்ன என்று நீங்கள் காட்ட வேண்டும், " என்று தெரிவித்தார். இவ்வாறு வாதம் நடைபெற்றது.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications