தலைக்கேறிய "கஞ்சா" போதை.. காதலியை 35 துண்டுகளாக வெட்டிய கொடூரன்! டெல்லி கொலையில் நடந்தது என்ன! பரபர
டெல்லி: தலைநகர் டெல்லியில் அரங்கேறிய சாரதாவின் கொலை விசாரணையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்களும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
தலைநகர் டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்க வைத்துள்ளது. அந்த கொலை குறித்து வெளிவரும் தகவல்கள் சினிமாவையே மிஞ்சுவதாக உள்ளது.
கொலை செய்த உடன் உடலை 35 துண்டுகளாக வெட்டிய கொலையாளி, அதை வீட்டிலேயே பிரிஜ்ஜில் வைத்து உள்ளான். மேலும், அடுத்த சில நாட்களில் டெல்லியில் பல இடங்களில் உடலை வீசியுள்ளான்.

படுகொலை
இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சாரதா, காதலனுக்காகப் பெற்றோரைத் தூக்கி எரிந்தவர். இதனால் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமலேயே இருந்து உள்ளது. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் எந்தவொரு போஸ்டும் இல்லை என்று சந்தேகித்த சாரதாவின் தந்தை இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் கேட்ட போது தான், அவர் மாயமானது தெரிய வந்து உள்ளது.

கொடூரம்
இது குறித்து சாரதாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் தான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் அமீன் வாக்குமூலத்தின் போது தரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகவே அமைந்து உள்ளது. அதாவது அப்தாப் அமீன் தான் கஞ்சாவுக்கு அடிமையானவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கஞ்சா
குறிப்பாக, கடந்த மே 18ஆம் தேதி கஞ்சா போதையில் தான் சாரதா கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவர் போலீசாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் போது அமீன் பல தகவல்களைக் கூறியுள்ளார். தான் கஞ்சா புகைப்பது சாரதாவுக்கு பிடிக்காது என்றும் இது தொடர்பாகக் கூட இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். கொலை நடந்த போதும் கட இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது.

சண்டை
அவர்கள் மும்பையில் இருந்து டெல்லி சென்ற நிலையில், உடைமைகளை யார் எடுத்து வருவது என்பது குறித்து மோதல் ஏற்பட்டு உள்ளது. மேலும், செலவுகள் அதிகரித்தது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது இருவரும் மாறி மாறி திட்டி கத்தி சண்டை போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் அமீன் வெளியே சென்று கஞ்சாவைப் புகைத்து விட்டு வீட்டிற்குத் திரும்பி உள்ளான்.

கஞ்சா போதை
கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில், சிறு சண்டையில் சாரதாவின் கழுத்தை நெறித்து அவன் படுகொலை செய்துள்ளான். சாரதாவை கொலை செய்ய வேண்டும் என நினைக்கவில்லை என்றும் இருப்பினும் கஞ்சா போதையில் கொலை செய்துவிட்டதாக அவன் போலீசாரம் தெரிவித்து உள்ளார். இந்தச் சம்பவம் கடந்த மே 18ஆம் தேதி இரவு 9 முதல் 10 மணி வரை அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.

பக்கத்திலேயே சிகரெட்
அது மட்டுமின்றி அன்றைய தினம் இரவு முழுக்க கஞ்சா சிகரெட்டை புகைத்தபடி சாரதாவின் சடலத்திற்கு அருகிலேயே அப்தாப் உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னரே, இணையதளத்தைப் பார்த்து காதலியின் உடலை அந்த பெண் 35 துண்டுகளாக வெட்டியுள்ளான். அதை 300 லிட்டர் பிரிட்ஜில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தி உள்ளான்.

விசாரணை
கைது செய்யப்பட்டு உள்ள அப்தாப் நேற்று தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவனிடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைவில் அவனைக் கூட்டிச் சென்று விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொலை செய்து அந்த பெண்ணின் உடல் வீட்டில் இருக்கும் போதே, அமீன் டேட்டிங் செயலி மூலம் மற்ற பெண்களையும் வீட்டிற்கு அலைந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications