"பேச மாட்டியா செல்லம்".. திடீர்னு கேட்ட இளைஞர்.. கால்டாக்ஸிக்குள் நடந்த அக்கிரமம்.. விக்கித்த டெல்லி
டெல்லி: நாளுக்கு நாள் டெல்லியில் வன்முறை சம்பவங்கள் பெருகிவரும்நிலையில், இளம்பெண் ஒருவர் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. என்ன நடந்தது?
டெல்லி பெண் ஷ்ரத்தா கொலை வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தடுத்த பயங்கரங்கள் தலைநகரில் நடந்து வருகின்றன.. ஷ்ரத்தா விவகாரத்தில், கொலை செய்த பயங்கரத்தைவிட, அந்த கொலைக்கு பின் நடந்த சம்பவங்கள்தான் அதைவிட நடுக்கத்தை பொதுமக்களுக்கு இந்த டெல்லி சம்பவத்தில் ஏற்படுத்தியது.

ஷ்ரத்தா: ஷ்ரத்தாவின் வாயையும் மூக்கையும், தலைகாணியை எடுத்து நீண்ட நேரம் அழுத்தியதில், ஷ்ரத்தா துடிதுடித்து இறக்கவும், 300 லிட்டர் ப்ரிட்ஜை வாங்கி சடலத்தை மறைத்துள்ளார்.. பிறகு, வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டிவீசியிருந்தார். அதில் பல பாகங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதோ இப்போதுகூட ஒரு இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.. கடைசி நிமிடத்தில் அந்த பெண்ணின் உயர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இளம்பெண்: டெல்லி லாடோ சாராய் பகுதியை சேர்ந்தவர் அந்த பிராக்சி என்ற இளம்பெண்.. இவர் கவுரவ் பால் என்ற இளைஞருடன் கடந்த 2 வருடங்களாக பழகி வந்ததாக தெரிகிறது.. இந்த விஷயம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிந்துவிடவும், மகளை கண்டித்துள்ளார்கள்.. இனிமேல், கவுரவ் பாலுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்றும் அவருடனான தொடர்பை உடனடியாக துண்டிக்குமாறும் சொல்லி உள்ளார்கள்.. இதனால், பிராக்சியும், கவுரவ் பாலுடன் பேசுவதை தவிர்க்க துவங்கி உள்ளார்.
ஒவ்வொருமுறை பிராக்சியிடம் பேச முயன்றபோதெல்லாம், அவர் தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பது கவுரவ் பாலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. தன்னை அலட்சியப்படுத்துவதையும், உதாசீனப்படுத்துவதையும், ஏற்க முடியாமல் கோபத்தில் கவுரவ் இருந்துள்ளார். இந்த நிலையில், ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்காக டாக்சி முயற்சி செய்து கொண்டிருந்தார்..
அறிவிப்பு: நேற்றுமுன்தினம், இந்த கம்பெனியில் இன்டர்வியூ நடப்பதாக அறிவிப்பு வெளியாகவும், அந்த இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக கால்டாக்சியில் ஏறி சென்றுள்ளார் பிராக்சி. அப்போது திடீரென அவரை வழிமறித்த கவுரவ், நடுவழியிலேயே தகராறு செய்துள்ளார்.. தன்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என்று கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த கவுரவ் பால், மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, பிராக்சியை சரமாரிய குத்திவிட்டார்.. மொத்தம் 13 இடங்களில் கத்தியால் குத்தியதில், நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார் பிராக்சி.. பட்டப்பகலிலேயே, நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்துவதை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கத்தி கூச்சலிட்டார்கள்.. உடனே கவுரவ் அங்கிருந்து தப்ப முயன்றபோது, அவரை பொதுமக்களே சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர்..
போராட்டம்: பிறகு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிராக்சியை, மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதற்கு பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரிடம் கவுரவையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.. மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்க பிராக்சிக்கு தீவிர சிகிச்சை நடந்தது.. இப்போது, அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்..
எனினும் தொடர்ந்து சிகிச்சை நடந்து வரும்நிலையில், கைதான நபரிடமும் விசாரணை தீவிரமாகி உள்ளது. பட்டப்பகலில், தலைநகரில் நடந்த இந்த கொலை சம்பவம் அம்மக்களை உறைய செய்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications