பற்றி எரியும் தலைநகர் டெல்லி.. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கொரோனாவால் 12 பேர் பலியாகும் கொடூரம்!
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 12 பேர் உயிரிழக்கிறார்கள். இதனால் தலைநகர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனாவின் இரண்டாவது பாடாய்படுத்தி வருகிறது. அதுவும் தலைநகர் டெல்லியின் நிலையை நினைத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர் விட்டு அழும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடுகிறார்கள். கடந்த வாரம் ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் 5 பேர் இறந்து கொண்டிருந்தனர்.

மூச்சுத்திணறல்
ஆனால் தற்போது ஒரு மணி நேரத்திற்கு கொரோனாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 12 பேர் இறந்துவிடுகிறார்கள். கடந்த திங்கள்கிழமை 240 பேர் டெல்லியில் மரணித்தார்கள். சராசரியாக ஒரு மணி நேரத்தில் 10 பேர் வரை மரணமடைந்தார்கள்.

மரணம்
அது போல் கடந்த ஏப்ரல் 12 முதல் 17 வரை 677 பேர் மரணமடைந்துள்ளார்கள். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 10 பேருக்கு மேல் இறந்தனர். ஆனால் கடந்த திங்கள்கிழமை அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை 1,777 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

மோசமான நாள்
கடந்த வியாழக்கிழமை மட்டும் 13 பேர் டெல்லியில் மரணமடைந்தார்கள். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 15 பேர் வீதம் இறப்பதாக கணிக்கப்பட்டது. கொரோனா தொடங்கிய நாள் முதல் கடந்த சனிக்கிழமை மிகவும் மோசமான நாளாகும்.

15 இறப்புகள்
இந்த சனிக்கிழமையில் 357 பேர் டெல்லியில் மரணமடைந்தார்கள். இதனால் மணிக்கு 15 இறப்புகள் நடப்பதாக கணிக்கப்பட்டது. கடந்த ஒரே வாரத்தில் கொரோனா உறுதியானவர்களின் விதிகம் 26.12 சதவீதத்திலிருந்து 32.27 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 4ஆவதாக எடுக்கப்படும் சளி மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதியாகிறது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications