ரூ 1 கோடி ஹெராயின் கடத்தியதாக நிழல் உலக தாதாவின் மனைவி ஜோயா கான் கைது
டெல்லி: ரூ 1 கோடி ஹெராயின் வைத்திருந்ததாக பிரபல நிழல் உலக தாதாவின் மனைவி ஜோயா கான் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
டெல்லியை சேர்ந்தவர் ஹஷீம் பாபா. இவர் நிழல் உலக தாதா. இவர் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கணவர் பார்த்த வேலையை மனைவி ஜோயா கான் பார்த்து வருகிறாராம். இதற்காக ஏராளமான ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளாராம்.
போதை பொருள் கடத்தும் விதத்திற்காகவே, போதை பொருள் கும்பலால் இவர் லேடி டான் என அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஜோயா கான் ரூ 1 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் வைத்திருந்ததாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் எடை 270 கிராம் ஆகும். திகார் சிறையில் கணவர் ஹஷீம் பாபாவை, ஜோயா அடிக்கடி சென்று பார்த்ததாக கூறப்படுகிறது. அவரும் சிறையில் இருந்து கொண்டே தனது மனைவிக்கு சில உத்தரவுகளை கொடுத்து போதை பொருள் கடத்தல் வேலையை கச்சிதமாக பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் டெல்லி குற்றப்பிரிவு சிறப்பு போலீஸார் ஜோயாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications