அடுத்தது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி- அமித்ஷா விவகாரத்தில் டெல்லி போலீஸ் சம்மன்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பான வீடியோ ஒன்றை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். ஆனால் அமித்ஷா தொடர்பான போலி வீடியோவையே ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பகிர்ந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஐடி சட்டத்தின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பகிர்ந்திருந்த வீடியோவில், தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை நீக்குவது தொடர்பாக அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசிப்பதாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ போலியானது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பகிரப்பட்ட பின்னரே, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்ற கருத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்தனர். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பதிலடி தந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் மே 1-ல் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. மே 1-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும் போது, தமது செல்போனையும் ரேவந்த் ரெட்டி கொண்டு வர வேண்டும் எனவும் டெல்லி போலீஸ் தமது சம்மனில் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications