சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வெளியிட்ட டுவீட்.. டெல்லி போலீஸ் வழக்கு பதிவு
டெல்லி: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில், கிரெட்டா துன்பெர்க் கூறுகையில், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் பிறகு பகிர்ந்து இருந்த டூல்கிட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு அழுத்தங்கள் மூலம் உதவுவோம் என்று கூறியிருந்ததாக தெரிகிறது. ஆனால் இது பிறகு டெலிட் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில்தான் விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலரது ஒத்துழைப்பு இருப்பதாக கூறி சமூக வலை தளங்களில் டூல்கிட் தொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்கள் பரவிய வண்ணம் இருக்கின்றன.
அந்த டூல்கிட்டில் போராட்டக்காரர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது? வெளிநாட்டு தூதரகங்கள் முன்பாக போராட்டம் நடத்தி அழுத்தத்தை அதிகரிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய கூகுள் ஷீட் இணைக்கப்பட்டு இருந்தது.
எந்த ட்விட்டர் பதிவு பின்னணியில் சர்வதேச அளவிலான சதித் திட்டம் இருப்பதாக டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் போலீஸ் சந்தேகித்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே டெல்லி காவல்துறை கிரெட்டா துன்பெர்க் மீது இந்திய தண்டனை சட்டத்தின் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக இன்று மாலை தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனால் இதே டெல்லி காவல்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர் தங்களது முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரும் குறிப்பிடப் படவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் அதே நேரம் இந்த டுவிட்டர் பதிவில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தேசத்துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A, 153A, 153 மற்றும் 120B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் கிரெட்டா துன்பெர்க் மீண்டும் ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய விவசாயிகளுக்கு தொடர்ந்து தனது ஆதரவு இருக்கும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 18 வயது மட்டுமே நிரம்பிய கிரெட்டா துன்பெர்க் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் உலக நாட்டு தலைவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications