டெல்லி சலோ.. கொட்டும் பனி...வாட்டும் குளிர்.. 9-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நாளை மீண்டும் பேச்சு
டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பணியிலும் வாட்டும் கடும் குளிரிலும் விவசாயிகள் இன்று 9-வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய விவசாய சட்டங்கள் தங்களுக்கு எதிரானது; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. அதனால் அதனை திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு, விவசாய சங்க பிரநிதிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டெல்லியில் நேற்று 30 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 7 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே மேலும் பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications