‛‛வானிலை மையம் மீது சந்தேகம்’’.. டெல்லியில் புது ரெக்கார்ட் படைத்த வெயிலால் மத்திய அமைச்சர் உத்தரவு
டெல்லி: டெல்லியில் வரலாறு காணாத வகையில் இன்று முதல் முதலாக 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் டெல்லியில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வாய்ப்பில்லை. டேட்டாவை சரிபார்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் வானிலை மையம் தவறான தகவலை வெளியிட்டதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. பல இடங்களில் வெப்பஅலை வீசி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை என்பது பதிவாகி உள்ளது.

நேற்றைய தினம் வடமேற்கு டெல்லியில் அதிகபட்சமாக 49.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவானது. ஆனால் இன்றைய தினம் முதல் முறையாக இந்திய வரலாற்றில் டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விட அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது.
டெல்லியில் மாறிய வரலாறு.. தலைநகரில் கதறும் மக்கள்! முதல் முறையாக 52.9 டிகிரி செல்சியஸ் வெயில்! ஷாக்
அதன்படி இன்று டெல்லியின் புறநகர் பகுதியான முங்கேஷ்பூரில் மதியம் 2.30 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ள்ளது. இது டெல்லி வரலாற்றில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது. கடும் வெப்பஅலையுடன் முங்கேஷ்பூர் பகுதியில் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் வெப்பநிலை உயர்ந்து இருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஜுன் 1 வரை வெப்பஅலை வீசும் என்பதால் இன்னும் 3 நாட்களை எப்படி சமாளிப்பது என மக்கள் புலம்ப தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் டெல்லியில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பில்லை. மூத்த வானிலை அதிகாரிகள் வெளியிட்ட விபரத்தை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய புவியியல் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டெல்லியின் வெப்பநிலை 52.9 டிகிரி செல்சியஸை தொட்டிருக்க வாய்ப்பில்லை. இதனால் வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரிகள் டேட்டாவை சரிபார்க்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications