Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. உங்களால் ஒன்னும் பண்ண முடியாது.." டெல்லியை அதிர விட்ட மனைவி சுனிதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம் நடந்த நிலையில், அதில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் மனைவி சுனிதா ஆவேசமாகப் பேசினார்.

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் தான் முதல்வராகத் தொடர்வார் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

Deli CM Wife Sunitha says Arvind Kejriwal is a lion At INDIA rally

சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா இணைந்து 'லோக்தந்த்ரா பச்சாவ்' என்ற போராட்டத்தை நடத்தியது.

கண்டன கூட்டம்: இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸின் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், என்சிபி (எஸ்சிபி) தலைவர் சரத் பவார், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி மற்றும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே என எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பலரும் கலந்து கொண்டனர்.

கெஜ்ரிவால் கைதில் யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.. உலக நாடுகளுக்கு ஜகதீப் தன்கர் பதிலடி


அந்தக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதா, தனது கணவரைச் சிங்கம் என்றும் அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது என்றும் கூறினார். அந்த கூட்டத்தில் பேசிய சுனிதா கெஜ்ரிவால், சிறையில் இருந்து தனது கணவர் ஒரு செய்தியை அனுப்பியதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "அந்தச் செய்தியைப் படிக்கும் முன், உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன்.

அவர் ஒரு சிங்கம்: பிரதமர் நரேந்திர மோடி, என் கணவரைச் சிறையில் அடைத்தார். பிரதமர் மோடி செய்தது சரியா? கெஜ்ரிவால் உண்மையான தேசபக்தர், நேர்மையானவர் என்று நீங்கள் நம்புகிறீர்கள் தானே? கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார், அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள், அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா? உங்கள் கெஜ்ரிவால் சிங்கம், அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது," என்றார்.

தொடர்ந்து கெஜ்ரிவால் சிறையில் இருந்து அனுப்பிய மெசேஜை அவர் வாசித்துக் காட்டினார். அதில் கெஜ்ரிவால், "நான் இன்று வாக்கு கேட்க இந்த செய்தியை அனுப்பவில்லை. புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறேன். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மகத்தான தேசம் தான் இந்தியா. சிறைக்குள் இருந்தே பாரத அன்னையை நினைத்து வேதனைப்படுகிறேன். வாருங்கள். புதிய இந்தியாவை உருவாக்குங்கள்.

வாக்குறுதிகள்: எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவுக்கு "ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியக் கூட்டணியின் சார்பில் ஆறு உத்தரவாதங்களை முன்வைக்கிறேன். முதலில் நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது. இரண்டாவதாக ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம். மூன்றாவதாக ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் கட்டுவோம். நான்காவதாக. ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்குவோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையை உருவாக்குவோம். அங்கே அனைவருக்கும் இலவச சிகிச்சை கிடைக்கும்.

ஐந்தாவது, விவசாயிகளுக்குப் பயிர்களுக்குச் சரியான விலை வழங்கப்படும். ஆறாவது, டெல்லி மக்கள் 75 ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்டுள்ளனர். டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம். இந்த ஆறு உத்தரவாதங்களையும் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இந்த உத்தரவாதங்களுக்கான நிதி எங்கிருந்து வரும் என்று சந்தேகம் வரலாம். அதற்கான பிளானும் என்னிடம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+