'சாண்ட்விச்' போல 3 மசோதாக்கள்.. தொகுதி மறுவரையறையை திமுக எதிர்க்கிறது.. அழுத்தி சொன்ன டி.ஆர்.பாலு!
டெல்லி: சாண்ட்விச் போல 3 மசோதாக்களை மத்திய அரசு ஒன்றாக கொண்டு வந்துள்ளதாக திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்ப்பதாக கூறிய டி.ஆர்.பாலு, 2023ல் கொண்டு வரப்பட்ட மகளிர் மசோதாவை மீண்டும் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க 3 நாட்கள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இதன்பின் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதன்பின் அலுவல்கள் தொடங்கின. இதையடுத்து மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாக்களை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதன் அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அப்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், சாண்ட்விச் போல 3 மசோதாக்களை ஒன்றாக கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இந்த 3 மசோதாக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை.
ஏற்கனவே 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகளிர் மசோதாவை மீண்டும் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? தொகுதி மறுவரையறை மசோதாவை திட்டவட்டமாக சமரசம் இன்றி திமுக எதிர்க்கிறது. முதல்வர் ஸ்டாலின் கருப்புக் கொடியை ஏற்றி, மசோதா நகலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, மசோதாவை முதல்வர் ஸ்டாலின் எதிர்த்த பின் நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டிஆர் பாலு, நாங்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் பேசுகையில், இந்திய ஜனநாயகத்தை முடக்கும் வகையிலும் அடிப்படை அரசியலமைப்பை தகர்த்து உரிமைகளை பறிக்கும் வகையிலும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி லோக்சபாவில் 3 மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications