ஆச்சரியம்தான்! 53 கட்சிகள், 68 கட்டங்களாக 4 மாதங்கள் நடந்த 'இந்தியா'வின் முதல் லோக்சபா தேர்தல்!
டெல்லி: சுதந்திரமடைந்த இந்தியாவின் முதலாவது லோக்சபா தேர்தல் 1951-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி வரை 4 மாதங்களாக 68 கட்டங்களாக நடைபெற்றது என்பது ஆச்சரியமான சரித்திரம்தான்.
பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அப்போது உடனே லோக்சபா தேர்தல் நடத்தப்படவில்லை. 1952-ம் ஆண்டுதான் நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது.

68 கட்டங்களாக நடந்த தேர்தல்: 1952-வது ஆண்டு லோக்சபா தேர்தல் என நம் வரலாறு பதிவு செய்திருந்தாலும் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதமே தேர்தல் தொடங்கிவிட்டது. ஆம் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி முதல் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி வரை மொத்தம் 68 கட்டங்களாக நமது நாட்டின் முதல் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் மொத்தம் 10 கோடி பேர் வாக்களித்தனர்.
401 தொகுதிகள்: நாட்டின் முதல் லோக்சபா தேர்தலின் போது மொத்தம் 401 தொகுதிகள் இருந்தன. ஆனால் 489 பேர் எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது நமது நாட்டில் அப்போது 86 தொகுதிகளில் 2 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் இரட்டை உறுப்பினர் முறை நடைமுறையில் இருந்தது.
கள நிலவரம்: 1952-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் பிரதான கட்சியாக இருந்தது. அப்போது ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. காங்கிரஸுக்கு எதிரான முதன்மை கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. 1952 தேர்தலுக்கு முன்னர் வரை ஆயுதப் போராட்டத்தை நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் முதல் லோக்சபா தேர்தலின் போது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது கம்யூனிஸ்ட் கட்சி.
அதேபோல முதுபெரும் தலைவர்கள் ஆச்சார்ய கிருபாளினி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரும் காங்கிரஸுக்கு எதிரான சிறு கட்சிகளாக தேர்தல் களத்தில் பங்கேற்றன.
ஜனசங்கம்: இன்றைய பாஜகவின் மூலவேரான ஜனசங்கத்தை சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கி 1952-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். அதேபோல அம்பேத்கரும் Scheduled Castes Federation என்ற கட்சியை தொடங்கி தேர்தலை எதிர்கொண்டார். இதுதான் இன்றைய இந்திய குடியரசு கட்சியின் தொடக்கமாகும்.
வென்ற கட்சிகளும் இடங்களும்: நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தலில் 364 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு அடுத்ததாக 37 சுயேட்சைகள் எம்பிகளாக வென்றனர். ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வென்றது. அத்தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்பது 4 இடங்களில் வென்றிருந்தது. பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கமும் 3 இடங்களைக் கைப்பற்றியது. தீவிர இந்துத்துவா பேசிய இந்து மகாசபை 4 தொகுதிகளில் வென்றது. சென்னை மாநில முஸ்லிம் லீக் என்ற கட்சி 1 இடத்தில் வென்றது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில்.. : அன்றைய சென்னை மாகாணத்தில் மொத்தம் 63 தொகுதிகள் இருந்தன. இதில் 13 தொகுதிகளில் இரட்டை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வென்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான சோசியலிஸ்ட் கட்சி 2 இடங்களில் வென்றது. சுயேட்சைகள் 15 இடங்களில் வென்று எம்பியாகினர். அன்றைய சென்னை மாகாணத்தில் கிசான் மசுதூர் பிரஜா கட்சி 6, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 இடங்களில் வென்றன. காமன்வீல் கட்சி 3 இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. முதலாவது பொதுத் தேர்தலின் போது காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காமராஜரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கல்யாணசுந்தரமும் களத்தில் நின்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications