ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு.. மத்திய அரசு சொன்னதை போல வளர்ச்சியடைந்ததா?
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் சில தகவல்களை கூறியிருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு அந்தஸ்து நீக்கம்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் ஆகிறது.

தீர்ப்பு: இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாட்கள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு விசாரணையின் போது நீதிமன்றத்தில் கூறியிருந்தது. உண்மையிலேயே மத்திய அரசு சொன்னதை போல ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைந்துள்ளதா? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கல்வீச்சு தாக்குதல்: கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஏராளமான கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு எதிராக காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு துறையினர் நடத்திய தாக்குதலில் 124 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இதுபோன்ற சம்பவங்கள் ஒன்று கூட பதிவாகவில்லை. அதேபோல 2019க்கு முன்னர் ஏராளமான வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இப்போது அப்படி அடிக்கடி நடப்பதில்லை.
மூளைச்சலவை: மேலும் தீவிரவாதிகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையும் குறைந்திருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், தீவிரவாதிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு சேர்க்கப்படும் சம்பவங்கள் அதிக அளவு குறைந்திருக்கின்றன. பயங்கரவாதிகளின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் மீதான தாக்குதலும் குறைந்துள்ளன.
அதாவது இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1 முதல் ஆகஸ்ட் மாதம் 5 வரை பாதுகாப்புப் படையினரின் பல்வேறு நடவடிக்கைகளில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 120ஐ தாண்டியது. 2022ல் 186 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
திரும்பும் இயல்பு நிலை: கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியன்று சோபியான் அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் பிரமாண்ட நிகழ்வு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வு ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
முதலீடுகள்: ஜம்மு காஷ்மீரில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 2019ம் ஆண்டு வரை வெறும் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மட்டுமே முதலீடுகள் செய்யப்பட்டன. அவற்றுடன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னரான காலத்தை ஒப்பிடுகையில், முதலீடுகள் வேகமாக அதிகரித்துள்ளன.
சுற்றுலாத்துறை: 2019க்கு பிறகு ஜம்மு காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. சுற்றுலா துறையில் ஜம்மு காஷ்மீர் தேசிய அளவில் சிறந்த இடமாக மாறி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் 1.88 கோடி சுற்றுலா பயணிகள் இங்கு வந்திருக்கின்றனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2 கோடியை தாண்டும். ஒரு காலத்தில் ஹனிமூன் செல்பவர்கள்தான் ஜம்மு காஷ்மீருக்கு வருவார்கள். ஆனால் தற்போது திருமணமாகி நீண்ட ஆண்டுகள் ஆனவர்கள் கூட தங்கள் திருமண நாளை கொண்டாட இங்கு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications