Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை - புருனே தலைநகர் இடையே நேரடி விமான சேவை- பிரதமர் மோடி பயணத்தில் ஒப்பந்தம் கையெழுத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புருனே நாட்டின் தலைநகரான பண்டர் செரி பெகாவானுக்கும் தமிழ்நாட்டின் சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவைப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகின. முன்னதாக
புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அளித்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சிறப்பித்தார்.

பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பண்டார் செரி பெகாவானில் உள்ள இஸ்தானா நூருலுக்கு காலையில் சென்றடைந்தார். அவரை, புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அன்புடன் வரவேற்றார்.

பின்னர் புருனே சுல்தான் அளித்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் புருனே சுல்தானுக்கும், ஒட்டுமொத்த அரச குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். இங்கு எனக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும், நமது இருநாடுகளுக்கு இடையேயான நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை எனக்கு நினைவுபடுத்துகின்றன.

இந்த ஆண்டு புருனேயின் சுதந்திரத்தின் 40-வது ஆண்டு நிறைவு ஆண்டாகும். உங்களது தலைமையின் கீழ், புருனே நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. புருணை குறித்த உங்கள் பார்வை பாராட்டத்தக்கது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக, உங்களுக்கும், புருனே மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும் புருனேயும் ஆழமான வரலாற்று, கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு, நமது தூதரக உறவுகளின் 40-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். இந்தத் தருணத்தில், நமது உறவுகளை மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

நமது ஒத்துழைப்புக்கு உத்திசார்ந்த வழிகாட்டுதல்களை ஏற்படுத்த, பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வேளாண்மை, மருந்து, சுகாதாரம், நிதித் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

narendra modi brunei

எரிசக்தித் துறையில், திரவ இயற்கை எரிவாயுவில் நீண்டகால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த, பாதுகாப்புத் தொழில், பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். விண்வெளித் துறையில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த, செயற்கைக்கோள் மேம்பாடு, தொலையுணர்வுத் திட்டங்கள், பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்த, நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும்.

narendra modi brunei

மக்களுக்கு இடையேயான உறவுகளே நமது உறவின் அடித்தளமாகும். புருனேயில் உள்ள இந்திய சமூகத்தினர் புருனேயின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய தூதரகத்தின் புதிய தூதரக அலுவலகம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய சமூகத்தினருக்கு புருனேயில் நிரந்தர முகவரி கிடைத்துள்ளது. புருனேயில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக புருனே சுல்தானுக்கும், அவரது அரசுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

இந்தியாவின் கிழக்கத்திய நாடுகள் கொள்கை, இந்தோ-பசிபிக் தொலைநோக்கு செயல்பாடு ஆகியவற்றில் புருனே முக்கிய நாடாக உள்ளது. ஆசியான் மையத் தன்மைக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது. அதை தொடர்ந்து மேற்கொள்ளும். ஐநாசிஎல்ஓஎஸ் போன்ற சர்வதேச சட்டங்களின் கீழ் சுதந்திரமான கடல்வழி, வான்வழி போக்குவரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

narendra modi brunei

இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்து உங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இன்று நமது வரலாற்று உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. என்னை அன்புடன் வரவேற்றதற்காக மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புருனே சுல்தான், அரச குடும்ப உறுப்பினர்கள், புருனே மக்கள் ஆகியோரின் ஆரோக்கியத்துக்காகவும் செழிப்புக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

narendra modi brunei

சென்னைக்கு விமான சேவை: மேலும் செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களுக்கான டெலிமெட்ரி, கண்காணிப்பு, தொலைக் கட்டளை நிலையத்தை இயக்குவதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரும், புருனே போக்குவரத்து, தகவல் தொடர்பு அமைச்சர் பெங்கிரன் டத்தோ ஷம்ஹாரி பெங்கிரான் டத்தோ முஸ்தபாவும் கையெழுத்திட்டனர். பண்டார் செரி பெகாவானுக்கும், சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படவிருப்பதையும் அவர்கள் வரவேற்றனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை உருவாக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+