ராகுல் விவகாரம்: "மோதானி" பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி- ஜோதியில் இணைந்த திரிணாமுல்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தொடர்பான பேச்சுக்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, புதுவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கறுப்பு உடை அணிந்து இன்று சபையில் பங்கேற்றனர்.

இதனிடையே ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்க டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, திமுக டிஆர் பாலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திலும் காங்கிரஸ், திமுக தலைவர்கள் கறுப்பு உடையுடன் பங்கேற்றனர். மேலும் முதல் முறையாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஜேடியூ, பிஆர்எஸ், சிபிஎம், ஆர்ஜேடி, என்சிபி, சிபிஐ, ஐயூஎம்எல், மதிமுக, கேரளா காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒருங்கிணைந்து கறுப்பு உடையுடன் சென்றனர். நாடாளுமன்றம் கூடியதும் இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்ப தொடங்கினர். உடனடியாக இரு சபைகளும் மாலை 4 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
இதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர். இந்தப் பேரணியின் போது ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் பிரதமர் மோடி- அதானியை குறிப்பிடும் வகையில் மோதானி என்கிற பதாகைகளையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கைகளில் ஏந்தி இருந்தனர். இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார். சோனியா காந்தி, டிஆர்பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். இப்போராட்டத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இணைந்து கொண்டனர்.
டெல்லி போராட்டம் குறித்து சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளதாவது:

நீங்கள் கை வைத்திருப்பது
ராகுல் காந்தி மீது அல்ல
இந்திய ஜனநாயகத்தின் மீது...
அதானி மீது ஒரு துரும்பு கூட படாமல் பாதுகாக்கும்
உங்கள் அரசியலை
மக்கள் அறிவார்கள்.
தகுதி நீக்கம் என்ற பெயரில் நடக்கும்
உரிமை நீக்கத்தை
அனுமதிக்கமாட்டோம்.

டெல்லி போராட்டம் தொடர்பாக திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாவது: ராகுல் அவர்களின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். நாடாளுமன்ற சென்ட்ரல் ஹாலில் பாஜக அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது
#WATCH | Delhi: Opposition MPs protest near Gandhi statue in Parliament, wearing black attire, over Adani Group issue.
— ANI (@ANI) March 27, 2023
Congress president-Rajya Sabha LoP Mallikarjun Kharge and UPA chairperson Sonia Gandhi also join the protest. pic.twitter.com/JSYM8luVQt
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications