பட்ஜெட்டில் தமிழ்நாடு இல்லை.. ஆனால் திமுக அரசின் திட்டங்கள் இருக்கு.. ரோல் மாடல் ஆன தமிழக அரசு!
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த நிதி ஒதுக்கீடோ, திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற சொல்லே இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டுக்கு ஒரு அறிவிப்பும் இல்லை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மதுரை, கோவை மெட்ரோ தொடர்பாக செந்த தகவலும் இல்லை. 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். எனினும், அதுகுறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
தமிழக அரசின் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில்: அதேசமயம், தமிழ்நாட்டில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்களுக்கு நாடு முழுவதும் சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும், இதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தோழி விடுதிகள்: தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு தோழி விடுதி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. சென்னை, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
24 மணி நேர குடிநீர், வைஃபை, சுகாதாரமான கழிவறை என தனியார் விடுதிகளுக்கு இணையான வசதிகள் தோழி விடுதியில் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் இங்குள்ளன. இந்த விடுதிகளில் மாத அடிப்படையில், நாள் கணக்கில் பெண்கள் தங்கி கொள்ளலாம். தனியார் விடுதிகளை விட வாடகை மிகவும் குறைவு.
செல்போன் விலை சர்ருன்னு குறையுது.. மொபைல் போன், சார்ஜர்களுக்கு வரியை குறைத்து பட்ஜெட்டில் அறிவிப்பு!
இண்டர்ன்ஷிப்: மேலும், 1 கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் பயிற்சிப் பணி (இண்டர்ன்ஷிப்) வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டம்: இதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் 28 லட்சம் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கும், இண்டர்ன்ஷிப்புக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பக்கம் குறைத்து.. அந்த பக்கம் ஏற்றி.. எந்த பயனும் இல்லை.. பட்ஜெட் குறித்து ஆனந்த் சீனிவாசன்!
மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1,48,149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்ஃபோசிஸ், எஸ்.ஏ.பி, கூகுள் கேம்பிரிட்ஜ், சிமன்ஸ், டசால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் இணைந்து ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஆக, தமிழ்நாட்டுக்கு என எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் மத்திய அரசு புறக்கணித்திருந்தாலும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், மத்திய அரசால் எடுத்தாளப்பட்டு நாடு முழுமைக்கும் செயல்படுத்தப்பட உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications