கனிமொழி உட்பட “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நாளை மணிப்பூர் பயணம்- 18 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு!
டெல்லி: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உட்பட "இந்தியா" கூட்டணியின் எம்.பி.க்கள் குழு நாளை மணிப்பூர் சென்று நிலைமைகளை ஆய்வு செய்ய உள்ளதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
மணிப்பூரில் 3 மாதங்களாக இனமோதல்கள் நீடித்து வருகின்றன. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் அதிகமானோர் சொந்த வாழ்விடங்களைவிட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரை விட்டு குக்கி இனமக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து மிசோரம் மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.

மணிப்பூர் இனமோதல்களைத் தொடர்ந்து குக்கி மக்களுக்கு என தனியான நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட வீடியோ நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளது.
மேலும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தரக் கோரி கடந்த 6 நாட்களாக இரு சபைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளனர். இன்று 7-வது நாளாகவும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடும்.
இந்நிலையில் மணிப்பூர் நிலைமைகளை ஆய்வு செய்ய "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு நாளை மணிப்பூர் செல்கிறது. தற்போது இந்தக் குழுவில் இடம்பெறும் எம்.பி.க்கள் தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. "இந்தியா" கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான திமுக சார்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெறுகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஃபைசல் முகமது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஜாவேத் அலி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்டோர் நாளை மணிப்பூர் செல்லும் குழுவில் இடம் பெறும் எம்.பி.க்கள் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி. சுஷ்மிதா தேவ் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், நாளை மணிப்பூர் செல்லும் குழுவில் இடம்பெறுகிறோம். மணிப்பூரின் உண்மை நிலைமை என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். ஆகையால் "இந்தியா" கூட்டணி குழுவை மாநில அரசு அனுமதிக்க வேண்டும். மணிப்பூர் வன்முறைகளை வெளிஉலகுக்கு ஊடகங்கள்தான் கொண்டு வந்தன. ஆனாலும் இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிபப்டையில் அந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம் என்றார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி எஸ்டி ஹூசைன் கூறுகையில், மணிப்பூர் உண்மை நிலைமையை அறிய "இந்தியா" கூட்டணி எம்.பி.க்களை அம்மாநில அரசு அனுமதிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications