NO MEANS NO.. அஜித் பாணியில் ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்பி அப்துல்லா... ஸ்மிரிதி இராணி சொன்ன பதில்!
டெல்லி; திமுக எம்பி எம்எம் அப்துல்லா நேற்று மாநிலங்களவையில் marital rape எனப்படும் திருமண பாலியல் வன்கொடுமை குறித்து பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் தற்போது marital rape குறித்த வாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அதாவது கிரிமினல் சட்டத்தில் இதற்கு என்று மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. திருமணத்திற்கு பின் மனைவியின் விருப்பம் இன்றி கணவன் தனது மனைவியுடன் பாலியல் உறவு வைப்பது அல்லது பாலியல் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவது "திருமண பாலியல் வன்கொடுமை -marital rape" என்ற அழைக்கப்படுகிறது.

எதிர்ப்பு
இந்த marital rape சட்டம் குறித்த விவாதங்கள் இப்போது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இதை பற்றி இருந்தார். ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவரை தொட கூடாது. consent என்பது மிக மிக அவசியம் ஆனது. இந்தியாவில் அதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது மிக மிக அவசியமானது என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது பெண்ணின் அனுமதி இன்றி அவரை தொட கூடாது என்று marital rape குறித்து ராகுல் காந்தி பேசி இருந்தார்.

திமுக எம்பி
இந்த நிலையில் நேற்று திமுக எம்பி எம்எம் அப்துல்லா மாநிலங்களவையில் இதை பற்றி பேசினார். திருமணத்திற்கு பின்பு பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்களும் குற்றமே. அது குறித்த விழிப்புணர்வைப் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெண் ஒருவர் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோதான். மனைவியோ, காதலியோ யார் சொன்னாலும் No means Noதான்.

விழிப்புணர்வு தேவை
marital violence என்பது தவறு என்று சில பெண்களுக்கே தெரியவில்லை. தாங்கள் துன்புறுத்தப்படுகிறோம் என்பது பெண்களுக்கே தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் இதை பற்றிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திமுக எம்பி அப்துல்லா கோரிக்கை விடுத்தார். நடிகர் அஜித் பாணியில் அப்துல்லா நேற்று அவையில் பேசினார்.
Recommended Video

நேர் கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் 'NO MEANS NO' என்ற பதத்தை பயன்படுத்தி இருப்பார். அதை எடுத்துக்காட்டி அப்துல்லா நேற்று அவையில் பேசியது கவனம் பெற்றது. இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி, இது தொடர்பாக கிரிமினல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர ஆலோசனை செய்து வருகிறோம். இது விழுப்புணர்வு நடத்த ஏற்கனவே மாநிலங்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மாவட்ட அளவிலும் கூட்டங்கள் நடந்து வருகின்றன, ஆனால் எல்லா ஆண்களையும் குற்றவாளிகள் போல் சித்தரிக்க கூடாது, என்று குறிப்பிட்டார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications