தவிக்கின்றேன்.. சில மாசம் முன்பு பார்த்தோமே.. சண்முகத்திற்கு என்ன ஆனது? கலங்கும் தயாநிதி மாறன்
டெல்லி: மூத்த ஊடகவியலாளர் ஷம்மி என்ற சண்முகத்தின் மறைவிற்கு திமுக எம்பி தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் ஷம்மி என்ற சண்முகம் முன்பு சன் டிவியில் பணியாற்றிவர். அந்த சேனலில் வரும் குரல் இவருடையதுதான்.
இவரின் கம்பீர குரல்தான் சன் டிவியில் ஒரு காலத்தில் முக்கிய அடையாளமாக இருந்தது. 90ஸ், 80ஸ் பலருக்கு இவரின் வசீகர குரல் என்பது மிகவும் பிடித்தமானது.
சன் செய்திகளில் 'சிறப்புப் பார்வை' என்ற நிகழ்ச்சியும் இவரின் குரலின் கீழ் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

நெருக்கம்
சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் மற்றும் எம்பி தயாநிதி மாறன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாகவும் இவர் இருந்தார். அதன்பின் நியூஸ் 7 தமிழ் சேனலில் இவர் பணிக்கு சேர்ந்தார். அங்கு நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இதையடுத்து சமீபத்தில் இவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. உடலில் இவருக்கு சில பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் சிகிச்சை பெற்று வந்தார்,

சிகிச்சை
சமீபத்தில் இவருக்கு முக்கிய சிகிச்சை ஒன்று செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் நேற்று உடல்நிலை மோசமாகி சண்முகம் காலமானார். ஷம்மி என்ற பெயரில் ஊடக துறையில் அன்பாக அழைக்கப்பட்ட சண்முகத்தின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் சண்முகத்தின் மறைவிற்கு திமுக எம்பி தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

நெருக்கம்
இது தொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள இரங்கலில், தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் தனித்துவம் படைத்தவர். எனது தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம் இவருடைய கம்பீரமான காந்தக் குரல் ஒலிக்காத தெருக்களே இல்லை என்கிற அளவுக்கு தனது வசீகரக் குரலால் அனைவரையும் ஈர்த்த உடன்பிறவா சகோதரர் M.சண்முகம் அவர்களை இழந்து தவிக்கின்றேன். அவர் நம்மை விட்டுப் பிரியலாம், அவரது நினைவுகள் என்றுமே அகலாது.

இரங்கல்
சில மாதங்களுக்கு முன்னர் என்னை சந்தித்து ஓவியம் ஒன்றினை அன்போடு வழங்கிய நிகழ்வு இன்னமும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. திரு.M.சண்முகத்தை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடன் நெருக்கமாக பழகிய பலர் சண்முகத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications