அரசியலமைப்பு சட்டத்தில் என்ன சொல்லியிருக்கு தெரியுமா! பாயிண்டை பிடித்து பொளந்து கட்டிய திமுக எம்.பி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 275/1 ன் கீழ் மலைவாழ் பகுதி மக்களுக்கு இணையதள சேவை கிடைக்க பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதனை வெறுமனே கோரிக்கையாக பார்க்காமல் பழங்குடியின மக்களுக்கான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரும் சட்டப்பிரிவின் படி செய்து கொடுக்க வேண்டிய பணியாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Dmk MP Rajeshkumar urges, Steps should be taken to provide Internet service to the people of hilly areas

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் பலரும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை விவாத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இதேபோல் குருவிக்காரர் மற்றும் நரிக்குறவர் இனத்தை பட்டியல் பழங்குடியினர் இனத்தில் சேர்ப்பதற்கான மசோதாவை வரவேற்று ராஜேஷ்குமார் எம்.பி. பேசிக் கொண்டிருந்த போது, அந்த விவாதத்தில் பேசிய பாஜக எம்.பி.க்கள் இருவர், 27,000 மக்கள் தொகை கொண்ட குருவிக்காரர் சமுதாயத்துக்கு இந்த வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்கள்.

இவர்களுக்கு ஆன் தி ஸ்பாட்டில் கவுன்டர் கொடுத்து பேசிய ராஜேஷ்குமார் எம்.பி., சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு மக்கள் தொகையை அடிப்படையாக பார்க்க கூடாது என்றும் எந்த சமுதாயத்திற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் மறுக்கப்படுகிறதோ அவர்களுக்கு வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுவதாகவும் பொளந்து கட்டினார்.

ராஜேஷ்குமார் எம்.பி. புள்ளி விவரங்களுடனும் அரசியலமைப்பு சட்ட பாயிண்ட்களுடனும் இவ்வாறு பேசியதை பார்த்த சீனியர் எம்.பி.யான திருச்சி சிவா, அப்போதே அவரை அழைத்து பாராட்டவும் செய்திருக்கிறார்.

கைத்தறி நெசவாளர்கள், கோழிப்பண்ணைத் தொழில், மலைவாழ் மக்களுக்கு இணையதளம், தீப்பெட்டித் தொழில், என பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த முறை திமுக எம்.பி.க்கள் விவாதித்திருப்பது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+