Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே பேச்சு.. பாயிண்ட் பாயிண்ட்டாக அடுக்கிய டி ஆர் பாலு! மிரண்டு பார்த்த பாஜக.. நாடாளுமன்றத்தில் பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு எதிராக திமுக எம்பி டி ஆர் பாலு மிக கடுமையான விமர்சனங்களை வைத்தார். அவரின் பேச்சு அவையில் இன்று அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.

 DMK MP T R Baalu fierce speech against PM Modi in the No Confidence motion 2023

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதையடுத்து நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடியை வரவைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து இன்று விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

டி ஆர் பாலு பேச்சு: இதில் திமுக எம்பி டி ஆர் பாலு பேசுகையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் பழைய நண்பர்கள்தான். மத்திய அரசுக்கு முழு பெரும்பான்மை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம்

தீமைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பதா?. தீமைகளை அழிக்கத்தான் தீர்மானத்தை ஆதரிக்கிறது திமுக. தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது மத்திய அரசு.

வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு வாக்குறுதிகள் எதனையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ரூ15 லட்சம் வழங்கப்படும் எனும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 5 லட்சம் வேலைவாய்ப்புகளை ஒழித்துவிட்டார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் வருவாயில் 20% மட்டுமே தரப்படுகிறது. ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் செயல்படுத்தப்படவில்லை; 13வது திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை. கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

சேது சமுத்திர திட்டத்தை சோனியா, கருணாநிதி தொடங்கி வைத்ததால் முடக்கி வைத்துவிட்டது மத்திய அரசு. மதுரை எய்ம்ஸ்க்கு ரூ2,000 கோடி ஒதுக்கவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.

700 விவசாயிகள் டெல்லியில் மாண்டு போயினர்; குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை. குஜராத்தில் படுகொலைகள், காணாமல் போதல் தொடருகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்காதது ஏன்?. குஜராத்தில் பெரும்பான்மை- சிறுபான்மையினர் மோதல் நடந்ததை போல மணிப்பூரிலும் நடைபெறுகிறது.

குஜராத் வன்முறைகளின் போது ராஜதர்மத்தை பின்பற்ற சொன்னார் வாஜ்பாய்- அதையே சொல்கிறோம். மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்லம், பொதுமக்கள் படுகொலை நடந்துள்ளது. மணிப்பூர் வன்முறைகளை ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலக நாடுகள் கண்டித்துள்ளன. ஒவ்வொருவருக்கும் ₹15 வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்று எம்பி டி ஆர் பாலு குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+