உங்களுக்கு முதுகெலும்பு இல்லை.. இடக்கையால் ரவீந்திர நாத்தை அமர வைத்த டி.ஆர் பாலு.. பரபர வீடியோ!
அதிமுக எம்பி ரவீந்திரநாத்தை இன்று லோக்சபாவில் திமுக எம். பி டி.ஆர் பாலு மோசமாக கிண்டல் செய்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: அதிமுக எம்பி ரவீந்திரநாத்தை இன்று லோக்சபாவில் திமுக எம். பி டி.ஆர் பாலு மோசமாக கிண்டல் செய்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட்டு வருகிறது. திமுக , காங்கிரஸ் கட்சிகள் லோக்சபாவிலும் மசோதாவை தீவிரமாக எதிர்த்தது.
லோக்சபாவில் இதை எதிர்த்து பேசிய திமுக எம். பி டி.ஆர் பாலு, அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார், என்று கூறினார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் டி.ஆர் பாலு பேசிக்கொண்டு இருக்கும் போதே, அதிமுக எம்பி ரவீந்திரநாத் எழுந்து அவரை குறுக்கிட முயற்சி செய்தார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த டி.ஆர் பாலு வேகமாக இடதுகையை அவரிடம் காட்டி, ஏ கீழே உட்காருங்கள். உங்களுக்கு முதுகெலும்பு இல்லை. இந்த பாராளுமன்றம் என்பது முதுகெலும்பு உள்ளவர்களுக்கு.

எலும்பு
இங்கே முதுகெலும்பு உள்ள நபர்களைத்தான் சபாநாயகர் பேச அனுமதித்தார் என்று கூறினார். இதனால் அவையில் எல்லோரும் சிரிக்க தொடங்கினார்கள். திமுக எம்பிக்கள் இதனால் மேசையை தட்டி சிரிக்க தொடங்கினார்கள்.
|
பாவம்
இதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குழம்பிப் போனார். உடனே சபாநாயகர் டி.ஆர் பாலுவிடம் நீங்கள் அவரை மிரட்டும்படி பேச வேண்டாம் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த டி.ஆர் பாலு, இல்லை சார் நான் யாரையும் மிரட்டவில்லை. நான் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

வீடியோ
எனக்கு முதுகெலும்பு இருப்பதால் என்னிடம் பேச சொன்னீர்கள். சிலருக்கு முதுகெலும்பு இல்லை. அதனால் பேச கூடாது என்றேன். அவரின் கட்சியில் கூட எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். ரவியிடம் இருந்தும் கூட நான் நிறைய விஷயங்களை கற்க வேண்டும், என்று டி.ஆர் பாலு கிண்டலாக கூறி சிரித்தார். இந்த வீடியோ வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications