2 மேட்டர்.. 40 பேர்! டெல்லியில் வத்தி வைத்த ஆளுநர் ரவி? "அவரையே" பார்க்கிறாராமே? ஆளை அனுப்பும் திமுக
டெல்லி: ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பற்றி அவர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் திமுகவும் அவருக்கு எதிராக இன்றோ அல்லது நாளையோ முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் ஆர். என் ரவி நேற்று காலை திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ஆர். என் ரவி சந்திக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன,
ஆளுநர் ஆர். என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னதாக மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்த காரணத்தால் ஆளுநர் ரவி மீது திமுக கடுமையான புகார்களை வைத்தது.

மசோதாக்கள்
முக்கியமாக முதல்வரை வேந்தராக நியமிக்கும் முக்கியமான மசோதாக்களை ஆளுநர் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பாமல் இருந்தது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. மசோதாக்களை இப்படி ஒரு பக்கம் இப்படி கிடப்பில் போட்டு ஆளுநர் ரவி இந்து மதம் குறித்தும், சானதானம் குறித்தும் பேசியதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.

ஆளுநர் ரவி
இதில் அவர் தவறான பல தகவல்களை தெரிவிப்பதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. .அதோடு இல்லாமல் திராவிட கலாச்சாரம் இடையில் தோன்றியது என்றும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இவரின் செயல்பாடுகள் சில அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இவரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அவகாசம்
இதற்கான அவகாசம் நேற்றே முடிந்துவிட்டது. இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து கையெழுத்து போட்டுள்ளனர். இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார். அதன்பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இரண்டு விவகாரம்
இந்த சந்திப்பில் மொத்தம் இரண்டு விவகாரங்கள் பற்றி அவர் பேச உள்ளார். தனக்கு எதிராக 40 எம்பிக்கள் கடிதம் எழுதியது தொடர்பாக ஒரு பக்கம் பேசுவார் என்று கூறப்படுகிறது. தன்னை நீக்க வேண்டும் என்று எம்பிக்கள் எழுதிய கடிதங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் கோவை கார் வெடிப்பு தொடர்பாக இவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதுதான் அவர் பயணத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

டெல்லி பிளான்
இந்த நிலையில் இன்றோ அல்லது நாளையோ குடியரசுத் தலைவரை திமுக எம்பிக்கள் குழு திமுக எம்பி டிஆர் பாலு தலைமையில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. எம்பிக்கள் கையெழுத்து போட்ட கடிதத்தை அவர்கள் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளனர். இதில் டெல்லியில் உள்ள சில திமுக, திமுக கூட்டணி எம்பிக்கள் கையெழுத்து போட வேண்டும்.டி ஆர் பாலு டெல்லி சென்ற பின் அதில் இவர்கள் கையெழுத்து போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி ஆர் பாலு பெரும்பாலும் இன்று இரவு டெல்லி செல்லும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications