கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. லோக்சபாவில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
டெல்லி: கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு கருணாநிதி முன்னுதாரணமாக இருந்தார் என்றும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் லோக்சபாவில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் காரசார வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
இதனிடையே, இன்று லோக்சபாவில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:-
திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் சாம்பியனாக திகழ்ந்தார். தஞ்சாவூரில் பிறந்த கலைஞர், போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியையே சந்திக்காதவர்.
கலைஞருக்கு பாரத ரத்னா
ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. ஐன்ஸ்டீன் ஒருமுறை காந்தி குறித்து கூறும் போது, இந்த உலகில் பல தலைமுறைகள் வந்து செல்லும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மகாத்மா காந்தி போன்று சிலர்தான்.
அது கலைஞர் கருணாநிதிக்கும் பொருந்தும். 60 வருடங்கள் தான் சந்தித்த எந்த தேர்தலிலும் தோல்வி அடையாத கருணாநிதி, அரசியல் மட்டும் இன்றி இலக்கியம் என பலதுறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட அரசியல் தலைவரான கலைஞர் கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். என்று பேசினார்.
பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
நாட்டின் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது. ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களுக்கு ஏற்கனவே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் ஏபிஜே அப்துல் கலாமுக்கு 1997ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி , லால்பகதூர் சாஸ்திரி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்டோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications