வில்சனின் விளாசல்.. தமிழகத்தில் 20 சுங்கச்சாவடியை தூக்குங்க.. ராஜ்யசபாவில் முழங்கிய திமுக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் பேசியிருப்பது, நாடு முழுவதும் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.. சுங்கக்கட்டணம், சுங்கச்சாவடிகள் குறித்து வில்சன் சொல்வதென்ன?

சுங்கக்கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் கட்டாய வசூல் வேட்டை நடத்தப்படுவதை தொடர்ந்து கண்டித்து வருகிறார் திமுக எம்பி வில்சன்.. கடந்த 2 வருடங்களுக்கு முன்பும், இப்படித்தான் எதிர்ப்பை பதிவு செய்து ராஜ்ய சபாவில் கொந்தளித்திருந்தார்.

Wilson Rajya Sabha toll booths

"ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இந்தியாவில் உள்ளன.. அதில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளும் உள்ளன. சுதந்திரமாக பயணம் செய்வது என்பது அடிப்படை உரிமை. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது.

சுங்க கட்டணம்: நமது நாட்டில் மாநிலங்களின் முக்கிய சாலைகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் எடுக்கப்பட்டு சுங்க கட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்க கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்க கட்டண சாவடிகளிலும் உடனடியாக ஒரு தன்னாட்சி அமைப்பினைக் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களின் முதலீடுகள், சுங்க வரி மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்ததாரர்கள் அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பாக்கி தொகைகள் போன்றவற்றை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

பாக்கி தொகை: பாக்கி இருந்தால் அவர்களின் பாக்கி தொகையை தீர்த்து விட வேண்டும். ஏனெனில், பொதுப்பயன்பாட்டு உட்கட்டமைப்பில் லாபம் ஈட்டும் நோக்கம் இருக்கக் கூடாது. அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கு பதிலாக வாகனங்களை பதிவு செய்யும் பொழுது ஒரு முறை சிறிய கட்டணமாக வசூலிக்கப்படலாம்" என்று பேசியிருந்தார்.

வில்சன் அன்று பேசியிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்த நிலையில், மீண்டும் இப்போது சுங்கச்சாவடிகள் குறித்து வில்சன் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்... முக்கியமாக, தமிழ்நாட்டில் விதிகளை மீறி 20 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிஏஜி பரிந்துரையை மீறி சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மீண்டும் குற்றஞ்சாட்டியிருக்கிறார் வில்சன்.

வில்சன் விவாதம்: மாநிலங்களவையில் கவனஈர்ப்பு விவாதத்தில் திமுக எம்பி வில்சன் தற்போது பேசியதாவது: "தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் நடைமுறைகளுக்கு மாறாக 5 சுங்கச்சாவடிகள் மாநகராட்சி, நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 60 கி.மீ. குறைவான இடைவெளியில் இரண்டு சுங்கச் சாவடிகள் அமைக்கப்படக் கூடாது என்கிற வரம்பும் உள்ளது. இந்த வரம்பை மீறி 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற ஏற்கனவே மத்திய அரசு உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களுக்கு வரம்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால், பின்னர் சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.

கட்டணம் குறைப்பு: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (எண் 32) உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் ரூ. 28.54 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுக் கட்டணம் வசூலிக்கப்படாமல் 40 சதவீத கட்டணத்தை குறைக்க சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு இந்த கட்டணத்தை குறைக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. சுங்கக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த சுதந்திரமான அமைப்பு எதுவுமில்லை.

முறையில்லாமல் சுங்கக் கட்டணங்களை உயர்த்தும் முறை என்பது சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் ஈட்ட மட்டுமே உதவுகிறது. சுங்கச்சாவடிகளில் செய்யப்படும் முதலீடுகள், வசூலிக்கப்பட்ட தொகை ஆகியவை பகுப்பாய்வு செய்ய ஒரு சுதந்திரமான அமைப்பு தேவை. அல்லது புதிய வாகனத்தைப் பதிவு செய்யும்போது "ஒரு முறை" கட்டணமாக வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்" என்று திமுக எம்பி வில்சன் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+