டெல்லியில் திமுக எம்.பிக்கள் முக்கிய மீட்டிங்.. நாடாளுமன்ற விவகாரம் பற்றி ஆலோசிப்பதாக தகவல்
டெல்லி: டெல்லியில் திமுக உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். டிஆர் பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் திமுக சார்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் போர், டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து அனைத்து விவாதத்துக்கும் தயார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுந்து பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களை பற்றி விவாதிக்க சபைக்கு வலியுறுத்தினர்.
இரு அவைகளிலும் அமளி நீடித்ததால் முதலில் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. பிறகு லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. நாளை பீகாரில் நடைபெற்று வரும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் திமுக எம்பிக்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் திமுக எம்பி கனிமொழி, டி ஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க கூடிய தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications