"வெல்க அண்ணன் உதயநிதி".. டெல்லியில் முழங்கிய திமுக எம்பி.. அதிர்ந்த வெங்கைய நாயுடு
உதயநிதியின் பெயரை சொல்லி முழக்கமிட்டுள்ளார் திமுக எம்பி
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்பின்போது "வாழ்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி" என்று கோஷம் எழுப்பிய திமுக உறுப்பினர் கேஆர்எம் ராஜேஷ்குமாரை சபாநாயகர் வெங்கைய நாயுடு கண்டித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதையடுத்து அவர்களின் இடம் காலியானது.
காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான, வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி சோமு, கேஆர்என் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் போட்டியின்றியும் வெற்றி பெற்றனர்..

கூட்டம்
இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது... அப்போது திமுகவை சேர்ந்த எம்எம் அப்துல்லா, கேஆர்என் ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகியோர் எம்பியாக பதவியேற்று கொண்டனர்... 3 பேருமே தமிழில்தான் பதவியேற்று கொண்டனர்.. இதில், கேஆர்என் ராஜேஷ்குமார் மட்டும் பதவியேற்கும்போது, "வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி" என்று முழக்கமிட்டுள்ளார்..

வெங்கையா நாயுடு
இதை பார்த்த துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, "முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது, வெளியில் போய் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம் (Slogans will not be part of Record.. Outside, you can say whatever) என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ஒருபக்கம் வைரலாகி கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் விவாதங்களையும் எழுப்பி வருகிறது..

டெல்லி
இப்போதுதான் முதல்முறையாக தேர்தலில் போட்டியின்றி எம்எல்ஏவாகி உள்ளார் உதயநிதி.. அரசியலுக்கு வந்தும் சில காலம்தான் ஆகிறது.. அப்படி இருக்கும்போது எதற்காக டெல்லியில் சென்று அவர் பெயரை முழங்க வேண்டும்? முக ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த முழக்கமா இது? என்று சில கேள்விகள் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் திமுக தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியை தந்து வருகிறது..

வாழ்க கலைஞர்
இப்படி அவையில் முழக்கமிடுவது புதிதில்லைதான்.. கடந்த எம்பி தேர்தலின்போதுகூட, திமுக எம்பிக்கள் பதவி ஏற்றுகொண்டபோது, அதில் சில திமுக உறுப்பினர்கள் "வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்நாடு" என்று முழக்கமிட்டனர்... தயாநிதி மாறன் உள்ளிட்டோர் "வாழ்க கலைஞர்.. வாழ்க பெரியார்" என்று முழக்கமிட்டனர்.. இதை பார்த்த பாஜக எம்பிக்கள் சிலரும், "பாரத் மாதா கி ஜே" என்று கோஷமிட்டனர்.. தமிழிலும், இந்தியிலும் மாறி மாறி அப்போது முழக்கமிட்டு கொண்டதை, நாட்டு மக்கள் எளிதாக மறந்திருக்க முடியாது.. ஆனால், இன்றைய தினம் தனிநபர் பெயரை உச்சரித்து முழக்கமிட்டுள்ளது கவனத்தை பெற்று வருகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications