வாடகை வீட்டுதாரர்களுக்கு குஷி..பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் பலே வசதிகள்.. பிஎம் ஆவாஸ் யோஜனா மாஸ்
டெல்லி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையால் யார் யார் பயன் பெறலாம்?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டமானது, கடந்த 2016ல் இந்த பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.. கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றும்வகையில், அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.
தரமான வீடுகள்: கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்தும் சிறந்த திட்டமாகவும், குறிப்பாக, வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. அதன்படி, வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது..

இந்த திட்டத்தில், நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பிரிவுகள் உள்ளன. 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை மக்களுக்கானது.. 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானது.
வருமான: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வட்டி விகிதம் மிகவும் குறைவு. வருமானத்திற்கு ஏற்ப மானியத்தின் அளவு மாறுபடும்.. வீட்டின் அளவை பொறுத்தே மானிய தொகை வழங்கப்படுகிறது.. இந்த கடனை திருப்பி செலுத்த 20 ஆண்டுகள் அவகாசமும் தரப்படுகிறது.
மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.95 கோடி நிரந்தர வீடுகளை கட்டித் தர அரசு விரும்புவதால், இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.. இதற்காக 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட மானியம் அளிக்கப்பட உள்ளது.
அறிவிப்பு: இந்த மானியம் சமவெளிப் பகுதியில் பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சமும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ரூ.1.30 லட்சமும் வழங்கப்படும் என்று அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவை பயன்படுத்த, ஒருசில நிபந்தனைகள் உள்ளன.. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்... குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். பயனாளியில் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.
அரசுப்பணிகள்: விண்ணப்பதாரர் பெயரில் இதற்கு முன்பாக எந்தவொரு வீடும் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் குடும்பத்தில் இருக்கும் யாரும் அரசுப்பணியில் இருக்கக்கூடாது. அடையாள அட்டை, முகவரி மற்றும் வருமான சான்று மற்றும் சொத்து ஆவணங்கள் போன்றவற்றை ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, குடும்ப வருமானம் வருடத்துக்கு ரூ.18 லட்சத்திற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும் என்றம், அதற்கு மேல் வருமானம் இருந்தால் இந்த திட்டத்திற்கு தகுதியானவர் கிடையாது என்றும் இதுநாள் வரை நிபந்தனைகள் இருந்தன.. ஆனால், இதில்தான் தற்போது சலுகை தரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது. ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகிய தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படியொரு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாம்.
தகுதிகள்: அதன்படி, 120 சதுர மீட்டர் (சுமார் 3 சென்ட் அளவு) பரப்பளவு வரையிலான வீடு கட்ட வீட்டு கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்பட உள்ளது... இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.9 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அதாவது 18 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு இனி வட்டி மானியம் கிடைக்காது. 9 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களுக்கு வட்டி மானியம் கிடைக்கும். நகர்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் வருமான உச்சவரம்பு, பாதியாக குறைக்கப்பட்டுள்ளது...
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வாயிலாக பயன்பெற வேண்டுமானால், ஆன்லைனில் PMAY - https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். அதேபோல ஆஃப்லைனிலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது:
- pmaymis.gov.in என்ற இணையதளத்தில் லாகின் செய்து சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- குடிசை வாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது benefits under other 3 components என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் ஆதார் விவரம், வங்கிக் கணக்கு, பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி, குடும்பத் தலைவரின் பெயர், வீட்டின் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- பொதுச்சேவை மையத்திற்குச் சென்று நேரடியாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அப்போது, கட்டணம் செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்
- அதேபோல வங்கியையோ, வீட்டுக்கடன் வசதி தரும் நிறுவனத்தையோ அணுகி கடன் வாங்கும்போது, நீங்கள் பெறுகின்ற கடன், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் விதிமுறைகளுக்குப் பொருந்தி வருமானால், அந்த வங்கியோ, வீட்டுக் கடன் வசதி தரும் நிதி நிறுவனமோ, நேரடியாக வீட்டு வசதி அமைச்சகத்திடம் அல்லது தேசிய வீட்டு வங்கியிடமோ, தகவல்களை அளித்து அந்த மானிய தொகையை உங்களின் கடன் கணக்கில் வரவு வைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications