Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியால் பாஜக வளர்ந்திருக்கலாம்.. ஆனால், ஆர்எஸ்எஸ் இல்லாமல் செயல்பட முடியாது.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆங்கில நாளிதழுக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அளித்த பேட்டி தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. பாஜகவில் இருந்து ஆர்எஸ்எஸ்ஸை கழற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற மில்லியன் டாலர் கேள்வியை எழுப்பி உள்ளது. தேசிய அரசியலில் பேசும் பொருளாக இந்த விவகாரம் மாறியுள்ள நிலையில் பிரதமர் மோடியால் பாஜக வளர்ந்து இருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் இன்றி பாஜகவால் செயல்பட முடியாது? என்பது சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

இந்திய அரசியலில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாத நிலை உள்ளது. பாஜக அரசியல் ரீதியாக செயல்பட்டு வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் பாஜகவுக்கு பக்கப்பலமாக இருந்து வருகிறது. இது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

Do you know why BJP may grow with Modi but cannot function without RSS

ஆனால் இப்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியிருக்கும் தகவல் தான் விவாததத்தை கிளப்பி உள்ளது. அதாவது பாஜகவுக்கு, ஆர்எஸ்எஸ்ஸின் உதவி என்பது தேவையில்லை என அவர் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.

ஜேபி நட்டா சொன்னது என்ன: அதோடு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையேயான உறவு விரைவில் முடிவுக்கு வருகிறதா? என்ற மில்லியன் டாலர் கேள்வியையும் எழுப்பி உள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் இது தான் தேசிய அரசியலில் பேசும் பொருளாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆங்கில ஊடகத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அளித்த பேட்டி தான் காரணம். அந்த பேட்டியில் ஜேபி நட்டா கூறியதாவது:

முன்பு பாஜக வளர்ச்சியடையாமல் இருந்திருக்கலாம். அப்போது ஆர்எஸ்எஸ்ஸின் உதவி தேவையாக இருந்தது. ஆனால் இன்று பாஜக வளர்ந்து திறமையான கட்சி என்பதை நிரூபித்துள்ளது. அதோடு தற்போது பாஜக என்பது இந்தியா முழுவதும் தனித்த அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது. இதனால் பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆர்எஸ்எஸ் தேவை இல்லையா? என்றால் ஆர்எஸ்எஸ் அதன் சித்தாந்த பணிகளை செய்கிறது. நாங்கள் எங்கள் பணிகளை செய்கிறோம். எங்கள் காரியகர்த்தாக்களின் (பாஜக தொண்டர்கள்) செயல்பாட்டால் நாங்கள் 140 கோடி இந்தியர்கள் விரும்பும் தேர்வாக மாறி உள்ளோம்’’ என்றார். ஜேபி நட்டாவின் இந்த பேச்சு தான் தற்போதை விவாதத்துக்கான தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது.

கையேந்த வேண்டிய அவசியமில்லை.. ஆர்எஸ்எஸ் உறவை முறிக்கும் பாஜக? மோடி எடுத்த மேஜர் முடிவு? ட்விஸ்ட்

ஆர்எஸ்எஸ்ஸை கழற்றிவிடும் பாஜக: இதன்மூலம் ஜேபி நட்டா கூறியது என்னவென்றால், ‛‛2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதற்கான பலன் என்பது பாஜக தொண்டர்களை மட்டுமே சேரும். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேராது’’ என்பது தான். ஜேபி நட்டா தற்போது பாஜகவின் தேசிய தலைவராக உள்ளார். மேலும் ஜேபி நட்டாவும் ஆர்எஸ்எஸ்ஸின் சங்க சகா அமைப்பில் இருந்து வந்தவர். ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் செயல்பட்டு அரசியலுக்கு ‛என்ட்ரி’ கொடுத்தவர். அவரே இப்படி ஆர்எஸ்எஸ் பற்றி கூறியிருப்பது என்பது அந்த அமைப்பில் இருந்து விலகி தனியே அரசியல் பயணத்துக்கு பாஜக திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டுமின்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாகராக இருந்த நரேந்திர மோடி தான் பிரதமராக உள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் செயல்பட்டு அரசியலுக்கு நுழைந்தவர் தான் பாஜகவில் அரசியல் சாணக்கியராக அறியப்படும் அமித்ஷா. இப்படி நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோருக்கு ஆர்எஸ்எஸ்சுடன் நெருக்கமான தொடர்பு உள்ள நிலையில் ஜேபி நட்டாவின் இந்த பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் கூட ஜேபி நட்டா, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அனுமதியின்றி இந்த கருத்தை தெரிவித்து இருக்கமாட்டார் என்கின்றனர் விபரம் அறிந்தவர். இதனால் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் இணைந்து ஆர்எஸ்எஸ்க்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பரவும் தகவல் என்ன?: மேலும் பாஜகவில் தற்போது என்ன நடக்கிறது? எதற்காக ஜேபி நட்டா இப்படி பேசியுள்ளார்? தற்போது பாஜக எப்படி பலமான கட்சியாக வளர்ந்தது? ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியின்றி பாஜகவால் வரும் காலத்தில் செல்பட முடியுமா? ஒருவேளை பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசியலுக்கு வெளியே வைத்தால் என்ன நடக்கும்? என்பது பற்றி இந்த செய்தியில் வாங்க பார்க்கலாம். ஜேபி நட்டாவின் இந்த பேச்சை தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.

அதாவது ஜேபி நட்டாவின் கருத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்க்கு எச்சரிக்கை விடுக்கும் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு தேர்தல்களிலும் பாஜகவுக்கு பக்கபலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் களப்பணி செய்வார்கள். ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்பட பல வடமாநிலங்களில் பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்யவில்லை. இதனால் ஆர்எஸ்எஸ்ஸை எச்சரிக்கும் வகையில் பிரதமர் மோடி, அமித்ஷா அனுமதியுடன் ஜேபி நட்டா இந்த கருத்தை கூறியுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளது.

உண்மை என்ன?: ஆனால் உண்மையில் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெ்னறால் முன்பே சொன்னது போல் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்ஸின் அங்கங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை பிரித்து பேசமாட்டார்கள்.

இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி பிபிசி சேனலுக்கு அளித்த பேட்டியை பார்த்தால் இன்னும் தெளிவாக புரியும். அதில், ‛‛பிரதமர் மோடி கடந்த தேர்தல்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபலித்தன. மக்கள் தனிநபர் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் இந்த தேர்தலில் யார் வேண்டும் என்பதை காட்டுங்கள் என்று கேட்டோம். அதற்கு மக்கள் என் பெயரையும், பாஜகவின் பெயரையும் தெரிவித்தனர். நாட்டின் அனைத்து இடங்களிலும் என்னை நம்பினர். இதனால் தான் வெற்றி பெற்றேன்’’ என்றார்.

மோடி பேட்டி உணர்த்துவது:இந்த பேட்டியின் மூலம் பிரதமர் மோடி சொன்னது என்னவென்றால், ‛‛2014 தேர்தல் வெற்றி என்பது தன்னை முன்னிறுத்தியதால் தான் நடந்தது. மாறாக பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அல்ல என்பதை தான் வெளிப்படுத்தினார். அதற்காக ஆட்சியில் அமைந்தவுடன் அவர் ஆர்எஸ்எஸ்ஸை விலக்கி வைக்கவில்லை. தொடர்ந்து ஆர்எஸ்எஸ் கொள்கைகளுடன் செயல்பட தொடங்கினார். 500 ஆண்டுகளாக இருந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அடிக்கல் நாட்டில் கோவில் கட்டி பிரதிஷ்டையும் செய்து திறந்து வைத்துள்ளார். இப்படி ஒவ்வொரு செயலிலும் ஆர்எஸ்எஸ்ஸின் எண்ணத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.

ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் முக்கியமானவர்கள் : இதன்மூலம் ஜேபி நட்டாவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ‛‛தற்போது பாஜக வளர்ந்துவிட்டது. பிரதமர் மோடி பாஜகவின் வளர்ச்சிக்கு பெரும் சக்தியாக உள்ளார். ஆர்எஸ்எஸ் என்பது சித்தாந்த ரீதியான வழிக்காட்டலுக்கு தேவை. தேர்தலில் வெற்றி பெற தேவையில்லை’’ என்பதை தான் வெளிப்படுத்தி உள்ளார். அதோடு 2019ல் பாஜகவில் 18 கோடி உறுப்பினர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது மாநிலம், தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு என்பதற்கான சான்று இல்லாவிட்டாலும் கூட உலகளவில் மிகப்பெரிய கட்சியாக தற்போது பாஜக தான் உள்ளது என பலரும் கூறி வருவதை யாரும் மறுக்கவில்லை.

மேலும் ஜேபி நட்டாவின் இந்த கருத்தில் நாம் ஒன்றை புரிந்து வைத்து கொள்ள வேண்டும். தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். 75 வயதை கடந்தும் பிரதமராக மோடி நீடித்தாலும் கூட 2029 லோக்சபா தேர்தலில் பாஜக நிச்சயம் புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். அப்போது நிச்சயம் ஆர்எஸ்எஸ் இன்றி பாஜக தலைவர்களால் புதிய பிரதமரை தேர்வு செய்ய முடியாது. ஏனென்றால் வடமாநிலங்களில் பாஜகவில் செயல்படும் முக்கிய தலைவர்கள் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள் தான்.

ஆர்எஸ்எஸ்-சை விட முடியாது: அதோடு தற்போது பிரதமர் மோடிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் 2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெறலாம். ஆனால் அதனை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ்ஸை கழற்றிவிடுவது என்பது பாஜகவுக்கு பிரச்சனையாக மாறும். ஏனென்றால் உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல வடமாநிலங்களில் உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தான் தீவிரமாக களப்பணியாற்றுகின்றனர்.

வீடுவீடாக சென்று மக்களை சந்திப்பது, தேர்தல் நாளில் மக்களை பூத்துக்கு அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்து வருகின்றனர். மேலும் தற்போது சில இடங்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே பிணக்கு உள்ளது. இதற்கு பிற கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுத்தது தான். இதனால் சில இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தேர்தல் பணி செய்யவில்லை என கூறப்பட்டாலும் கூட அவர்கள் தங்களின் ஓட்டுகளை மாற்று கட்சிக்கு அளிப்பது இல்லை. இது பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. அதோடு பிரதமர் மோடியை எதிர்த்து எதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர் இல்லை. இதனால் இந்த முறை நிச்சயம் பாஜக வெற்றி பெறலாம். அதனால் ஜேபி நட்டா இப்படி பேசியிருக்கலாம்.

ஆனால் உண்மையிலேயே ஆர்எஸ்எஸ்ஸை கழற்றிவிட்டு பாஜக இந்த தேர்தலில் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியின் செல்வாக்கை பயன்படுத்தி வெல்லலாம். ஆனால் பிரதமர் மோடியின் அரசியல் ஓய்வுக்கு பிறகு ஆர்எஸ்எஸ்ஸை கழற்றிவிட்டு பாஜக தனிப்பட்ட முறையில் செயல்படுவது என்பது பெரும் சவாலானதாகும். இன்னும் சொல்லப்போனால் அப்படி எதுவும் நடக்காது. பிரதமர் மோடிக்கு பிறகு புதிய பிரதமர் வேட்பாளரை பாஜக தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அப்போது கூட ஆர்எஸ்எஸ் தான் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+