அனுபவத்தில் சொல்றேன்.. சிறுநீரை குடித்ததால் காயம் குணமாகும்.. பிரபல நடிகருக்கு டாக்டர்கள் எதிர்ப்பு
டெல்லி: நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் கொடுத்த அட்வைசின்படி சொந்த சிறுநீரை தினமும் காலையில் குடித்து வந்ததால் காலில் ஏற்பட்ட காயம் 15 நாளில் முற்றிலுமாக குணமானது என்று நடிகர் பரேஷ் ராவல் கூறியுள்ளார். அவருக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் சிறுநீரை குடிக்க கூடாது. மீறினால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொதுவாக நடிகர், நடிகைகள் சொல்லும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் என்பது பொதுமக்களிடம் எளிதாக சென்றடைந்து விடும். இதனால் ஒவ்வொரு நடிகர், நடிகர்களும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆனால் சில நடிகர், நடிகைகள் அப்படி நடந்து கொள்வது இல்லை.

இந்நிலையில் தான் பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலின் பேட்டி பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இவர் சமீபத்தில் கொடுத்த இண்டர்வியூ சர்ச்சையை கிளப்பியது. இதற்கு முக்கிய காரணம் தனது சிறுநீரை குடித்ததன் மூலம் மூட்டு வலி குணமானதாக கூறியது தான். அதாவது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை பெயர் வீரு தேவ்கன். இவர் கொடுத்த அட்வைசை தொடர்ந்து தான் சிறுநீரை குடித்ததாக பரேஷ் ராவல் கூறினார்.
இதுபற்றி பரேஷ் ராவல் கூறுகையில், ‛‛நான் மருத்துவமனையில் இருந்தபோது வீரு தேவ்கன் என்னை பார்க்க வந்தார். அப்போது என்ன நடந்தது? என்று என்னிடம் கேட்டார். நான் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக கூறினேன். அதற்கு அவர் சொந்த சிறுநீரை காலையில் தினமும் குடித்தால் சரியாகும் என்று கூறினார். இதையடுத்து நான் பீர் போன்று தினமும் காலையில் எனது சிறுநீரை குடிக்க முடிவு செய்தேன். சிறுநீரை குடித்த 15 நாளில் எனது காயம் முற்றிலுமாக குணமடைந்தது'' என்றார்.
நடிகர் பரேஷ் ராவல் கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பலரும் பரேஷ் ராவலை கடுமையாக விமர்னசம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் சிறுநீரை மக்கள் யாரும் குடிக்கவே கூடாது என்று டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளதோடு நடிகர் ரேஷ் ராவலை விளாசி வருகின்றனர்.
இதுபற்றி பேமஸான கல்லீரல் சிகிச்சை நிபுணரான டாக்டர் சரைியக் அபய் பிலிப்ஸ் கூறுகையில், ‛‛பாலிவுட் நடிகர் கூறிவிட்டார் என்பதற்காக மக்கள் யாரும் சொந்த சிறுநீர் அல்லது மற்றவர்களின் சிறுநீரை குடிக்க வேண்டாம். அதில் அறிவியல்பூர்வமான ஆதாரம் என்பது இல்லை. அதோடு அது உடலுக்கு நல்லது என்பதற்கான ஆதாரங்களும் இல்லை.
மாறாக சிறுநீரை குடிப்பது என்பது உடல்நலத்துக்கு கேடானது. அதில் பாக்டீரியா, உடலுக்கு ஒவ்வாத நச்சுக்கள் என்பது இருக்கும். சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதில் மிகவும் சிரமப்படும். இப்படியான சூழலில் மீண்டும் சிறுநீரை குடிப்பது என்பது நம் உடலுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரை குடித்தால் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்'' என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூர் கெங்கேரியில் உள்ள க்ளெனிகிள்ஸ் பிஜிஎஸ் மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அனில் குமார் கூறுகைியல், ‛‛சிறுநீரில் கெட்ட பாக்டீரியாக்கள், நச்சுப்பொருட்கள் உள்ளன. அதோடு சிறுநீர் என்பதே உடலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுதான். அதனை குடித்தால் உடலுக்கு கேடு தான் ஏற்படும். சிறுநீரில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 5 சதவீதத்தில் நச்சுகள், யூரியா மற்றும் கிரியேட்டினின் உள்ளிட்டவை உள்ளன. இதில் கிரியேட்டின் உடலுக்கு செல்லும்போது அது உடல் நல பிரச்சனையை ஏற்படுத்தும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications