எல்லையில் சீனாவின் பெரிய ராணுவ தளம்.. இந்தியா தனது பகுதிகளை இழந்ததா? அதிர வைக்கும் சாட்டிலைட் படங்கள்
டெல்லி: இந்தியச் சீன எல்லையில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்த சில புதிய படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் சுமுகமான உறவு இல்லை. அதிலும் கல்வான் மோதலுக்குப் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது
அதன் பின்னர் இரு தரப்பும் எல்லையில் மாறி, மாறி தொடர்ச்சியாக ராணுவத்தைக் குவித்து வந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் எல்லையில் போர் ஏற்படும் அளவுக்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் உருவானது.

சீனா
அதைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாக ராணுவ பேச்சுவார்த்தை நடந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடந்த வாரம் தான் எல்லையில் எல்லா பகுதிகளில் இருந்தும் படைகளா பின்வாங்கச் சீனா ஒப்புக் கொண்டது. இதன் பின்னர் எல்லையில் மெல்ல இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு பகுதியில் சீன படைகள் ஆக்கிரமித்திருந்தது.

பெரிய ராணுவ தளம்
அந்த பகுதிகளில் இருந்து சீன வீரர்கள் 3 கிலோமீட்டர் தொலைவில் பின்வாங்கியதை புதிய சாட்டிலைட் படங்கள் உறுதிப்படுத்துகிறது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கு முன்பு 2020இல் இந்திய ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு அருகில் சீன பெரிய ராணுவ தளத்தை அமைத்து இருந்தது. அதில் இருந்தும் சீன ராணுவம் இப்போது பின்வாங்கி உள்ளது.

தற்காலிக தளம்
இந்தியா ரோந்து பணிகளை மேற்கொண்ட இதே இடத்தில் ஆகஸ்ட் 12இல் எடுக்கப்பட்ட படங்களில் சீன இராணுவம் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டியிருந்தது. அது அகழிகளால் சூழப்பட்டு, பக்காவாக கட்டப்பட்டு இருந்தது. இந்த ராணுவ தளத்தில் இருந்து தான் சீனா இப்போது வெளியேறி உள்ளது. இந்த ராணுவ தளத்தை காலி செய்து இதன் வடக்கே ஒரு தற்காலிக தளத்தை சீனா ஏற்படுத்தி உள்ளது.

பொது இடம்
இரு தரப்பு ராணுவமும் பின் வாங்கப்பட்டு உள்ள நிலையில், buffer zone எனப்படும் பொதுவான பகுதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளது. நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக இந்த மண்டலத்தில் ரோந்து செல்ல அனுமதி இல்லை. இது தொடர்பாக லடாக் பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் கூறுகையில், "கடந்த 50 ஆண்டுகளாக நாம் ரோந்து சென்று கொண்டிருந்த சில பகுதிகளில் இருந்தும் ராணுவம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

இந்திய பகுதி
இது நமக்குப் பெரிய பின்னடைவாக இருந்தது. நமது நாட்டிற்கு உட்பட்ட பகுதிகள் தான் buffer zone என்ற பொது மண்டலமாக மாறியுள்ளது. இது இங்கு வசிக்கும் ஆடு மேய்பவர்களுக்கு முக்கிய மேய்ச்சல் பகுதியாக இருந்தது. ஆனால் அது இப்போது பொது மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளது. இது இந்தியாவுக்குப் பெரிய பின்னடைவு தான்" என்றார்.

இழந்ததா?
அதாவது சீனா நேரடியாக இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்கவில்லை. இருப்பினும், அமைதிக்காக இப்போது உருவாக்கப்பட்டுள்ள பொது மண்டலம் அனைத்தும் இந்தியா பகுதிக்குள் தான் உள்ளது.. அதாவது இந்தியத் தனது பகுதிகள் பொது மண்டலமாக இழந்துள்ளது என்பது இவர்கள் முன்வைக்கும் வாதம். இருப்பினும், இது தொடர்பாக ராணுவம் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications