“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து!
டெல்லி: பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கில் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 23) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய் மாலியா பக்ட்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ராமதாஸ் தரப்பில், கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறை. குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை. இதனால் கட்சி யாருக்குச் சொந்தம் என்பது தீர்மானமாகும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அன்புமணி தரப்பில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதம் வைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியது யார்? இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் ராமதாஸ் தரப்பு சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், சிவில் நீதிமன்றம் மனுவை மூன்று நாட்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications