மோடி - டிரம்ப் நட்பு.. அதிகப்படியான வரி விதிப்பால் பாட்டு பாடி கிண்டல் செய்த காங்கிரஸ்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார். மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் இன்னும் கணிசமாகன அளவில் உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தற்போது நம் நாட்டை சீண்ட தொடங்கி உள்ளா். நம் நாட்டுக்கு 25 சதவீத வரிகளை விதித்துள்ளார். இது வரும் 7 ம் தேதி (நாளை மறுநாள்) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால் நம் நாட்டுக்கும் இன்னும் கூடுதல் வரியை டிரம்ப் விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் டிரம்ப்பின் வரி விதிப்பு என்பது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் பிரதமர் மோடி பெரும் சிக்கலில் மாட்டி உள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த வரிவிதிப்புக்கு பின்னணியில் ரஷ்யா உடனான நம் உறவு தான் காரணம். ரஷ்யாவிடம் இருந்து நாம் அதிகப்படியான கச்சா எண்ணெயை வாங்கி வருகிறோம். இதனை வாங்க கூடாது என்று டிரம்ப் கூறி வருகிறார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த பணம் உக்ரைன் மீதான போருக்கு பயன்படுகிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் நம் நாடு டிரம்ப்புக்கு அடிபணியவில்லை. இதனால் தான் கூடுதல் வரிகளை விதிப்பதாக டிரம்ப் மீண்டும் மிரட்டி உள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியும், தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார். டிரம்ப் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் நட்பை கேலி செய்துள்ளார். "தோஸ்த் தோஸ்த் நா ரஹா" என்ற பாடலை மேற்கொள்காட்டி அவர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"அவர்கள் 'ஹவுடி மோடி' மற்றும் 'நமஸ்தே டிரம்ப்' நடத்தினார்கள். 'அப்கி பார் டிரம்ப் சர்க்கார்' என்றார்கள். டிரம்ப் பதவியேற்பின்போது நமது வெளியுறவுத்துறை அமைச்சர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். பிரதமருக்கு, டிரம்ப்புடன் ஒரு சிறப்பு பந்தம் இருப்பதாகவும், அவர்கள் பழைய நண்பர்கள் என்றும் கூறப்பட்டது. இதன் விளைவு என்ன? வரிகள் உயர்த்துவோம் என அச்சுறுத்தப்படுகிறதே. பிரதமர் மோடி - டிரம்ப் நட்பால் இப்போது இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது'' என கூறியுள்ளார்.
மேலும் ஹிந்தி பாடலான. "தோஸ்த் தோஸ்த் நா ரஹா, டிரம்ப் யார் ஹமீன் தேரா ஐத்பார் நா ரஹா" என்பதை மேற்கொள் காட்டி பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். அதமட்டுமின்றி ‛‛இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கு தான் உதவி செய்ததாக டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் கூறியபோது மோடி மவுனம் காத்தார். டிரம்ப் இதை 32-33 முறை சொன்னார். பிரதமர் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இப்போது வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவுடனான நமது உறவுகள் மோசமடைந்துவிட்டன என்பது தெளிவாகிறது. இன்று, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் (CAP) ஆகியவை நமக்கு ஒரு சவாலாக மாறியுள்ளன" என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications