15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு- தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
டெல்லி: நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
Recommended Video
ராம்நாத் கோவிந்தின் ஜனாதிபதி பதவி காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 18-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் ஒடிஷாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவும் எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியானார்.

நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறை. நாட்டின் வரலாற்றில் பழங்குடி இனப் பெண் ஒருவர் ஜனாதிபதியாவதும் முதல் முறை. ஒடிஷா மாநிலம் ராய்ரங்பூரில் பிறந்து முதலில் அரசுப் பணியில் இளநிலை உதவியாளர், பின்ன ஆசிரியர் பணியாற்றி அரசியலுக்குள் நுழைந்தவர் திரவுபதி முர்மு. உள்ளாட்சி பிரதிநிதியாக, எம்.எல்.ஏ, எம்.பி.யாக, அமைச்சராக, ஆளுநராக அரசியலிம் உச்சம் தொட்ட திரவுபதி முர்மு இன்று தேசத்தின் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருகிறார்.
டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று காலை 9.25 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு திரவுபதி முர்மு சென்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமது குடும்பத்தினருடன் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து 9.50 மணிக்கு ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு இருவரும் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் புறப்பட்டனர். நாடாளுமன்றத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் திரவுபதி முர்முவை வரவேற்றனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications