கொளுத்தும் கோடை.. இப்பவே இப்படின்னா மார்ச், ஏப்ரல்?.. மேஜர் தகவலை சொன்ன வானிலை மையம்.. மக்களே உஷார்

கோதுமை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெயிலும், அனல் காற்றும் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கியுள்ள நிலையில், மின் தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை 211 ஜிகாவாட்டாக உயர்ந்திருக்கிறது. எனவே நிலக்கரி கையிருப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பல காலநிலை மாற்றத்தால் பல்வேறு விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 1 கோடி மக்களை பாதித்தது. இதற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம். அதேபோல, பிரிட்டனிலும் கடுமையான வெப்ப அலை உருவானது. இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டும் ஆசிய நாடுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்ககொள்ளும் என்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் வழக்கத்தைவிட 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உயர்ந்திருக்கிறது. சமவெளி பகுதியில் இந்த அளவுக்கு வெப்பநிலை பதிவானால் வெப்ப அலை வீசுகிறது என்று அர்த்தம். இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் தற்போது இந்த வெப்ப அலை வீசி வருகிறது.

 வெப்ப அலை

வெப்ப அலை

இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள மக்கள் ஏசி உள்ளிட்ட குளிர்சாதன கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மட்டுமல்லாது கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்ட தொழில்துறையானது மீண்டும் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது. எனவே வரும் ஏப்ரல் மாதம் மின்சாரத் தேவை அதிகபட்சமாக 229 ஜிகாவாட் என்கிற அளவை எட்டும் என்று மின்சாரத்துறை கணித்திருக்கிறது. எனவே அடுத்த மூன்று மாதங்களுக்கு முழு திறனில் இயங்க அனல்மின் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல நிலக்கரி சீரான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 வானிலை

வானிலை

மறுபுறம் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இவையனைத்தும் இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களுக்கு கடுமையான வெப்பநிலை நிலவும் என்பதை உறுதி செய்யும் வகையில் இருக்கிறது. இது குறித்து ராஜஸ்தான் மின்சாரத்துறை அமைச்சர் பன்வர் சிங் பாடி கூறுகையில், "தற்போது நிலைமை அசாதாரணமாக இருக்கிறது. இப்போது பிப்ரவரி மாதம்தான் நடக்கிறது. இருப்பினும் மின்சார தேவை அதிகரித்திருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் மின்தேவை 20-30% வரை அதிகரிக்கலாம். எனவே மின்வெட்டை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறியுள்ளார்.

 வடமாநிலங்கள்

வடமாநிலங்கள்

நாட்டின் வெப்பநிலை 40 டிகிரியை எட்டியுள்ள மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இம்மாநிலத்தில் இருக்கும் பாலைவனத்தில் மின்சார சேமிப்பு தகடு பொருத்தப்பட்டு அதன் மூலம் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இருந்தாலும், நிலக்கரி மட்டுமே பிரதானமான மின்சார ஆதாரமாக இருக்கிறது. எனவே நிலக்கரி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால் நிச்சயம் ராஜஸ்தான் மின்வெட்டை சந்திக்க நேரிடும். ராஜஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவின் 70% மின் தேவையை நிலக்கரிதான் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி போதுமான அளவு இருப்பு இல்லை.

நிலக்கரி

நிலக்கரி

வரும் மார்ச் மாதத்திற்குள் முழு கொள்ளளவான 45 மில்லியன் டன் நிலக்கரி நிரப்பப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வானிலை ஆய்வு இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவின் கூறுகையில், "பிப்ரவரியில் பதிவாகும் அதிக வெப்பத்தை கண்டு அஞ்ச வேண்டாம். இதற்கும் மார்ச்-ஏப்ரல்-மே மாதங்களில் பதிவாகும் வெப்பநிலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+