நடிகர் ரஜினியின் வளர்ப்பு தந்தைக்கு பத்மஸ்ரீ விருது.. யார் இந்த பாலம் கல்யாண சுந்தரம்? நெகிழ்ச்சி
சம்பாதித்த பணம், சொத்து உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு வழங்கி சமூக சேவை செய்த பாலம் கல்யாண சுந்தரம் திருநெல்வேலியில் பிறந்தவர்
டெல்லி: நடிகர் ரஜினிகாந்த் தனது வளர்ப்பு தந்தை என பெருமையாக கூறிய போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து சென்ற பாலம் கல்யாண சுந்தரத்தின் சமூக சேவையை பாராட்டி இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் தான் பாலம் கல்யாண சுந்தரம் யார்? அவருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் இடையேயான உறவு பற்றிய நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ என 3 பிரிவாக பத்ம விருதுகள் உள்ளன.
இந்நிலையில் தான் 2023ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தேர்வு
அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த பாடகி வாணி ஜெயராம் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன், தஞ்சாவூரில் பிறந்த பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

106 பேருக்கு விருது வழங்கல்
இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 106 பேருக்கும் இன்று டெல்லியில் நடந்த விழாவில் அனைவருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். விருதுக்கு தேர்வாகி மரணமடைந்தவர்கள் சார்பில் அவர்களின் குடும்பத்தினரிடம் விருது ஒப்படைக்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

யார் இந்த பாலம் கல்யாண சுந்தரம்
இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் தனது வளர்ப்பு தந்தை என பெருமையாக பேசிய பாலம் கல்யாண சுந்தரத்துக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. பாலம் கல்யாண சுந்தரம் திருநெல்வேலியில் பிறந்தார். இவர் கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக பணியாற்றி பணம் சம்பாதித்தார். இந்த சம்பளப்பணம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டுப் பணிக்கு கொடுத்தார்.

ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை
கல்யாண சுந்தரம் என்ற பெயர் கொண்ட அவர் பாலம் பாலம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வருகிறார் இதனால் அவரது பெயர் பாலம் கல்யாண சுந்தரம் என மாறிப்போனது. நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை இவரை வளர்ப்பு தந்தை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். அதாவது கடந்த 1999 காலக்கட்டத்தில் பாலம் கல்யாண சுந்தரம் பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது அவரது சமூக சேவையை புகழ்ந்து ரஜினிகாந்த் பேசினார். மேலும் தன் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதித் தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும் என மேடையிலேயே அறிவித்ததோடு தனக்கு தந்தையாக இருக்க வேண்டும் என பெருமையாக கூறினார். மேலும் வளர்ப்பு தந்தை போல் அவரை நடிகர் ரஜினிகாந்த் பாவித்தார்.

ரஜினியுடன் போயஸ் கார்டனில்..
மேலும் பாலம் கல்யாண சுந்தரத்தை நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்த சென்றார். அங்கு சிறிது காலம் பாலம் கல்யாண சுந்தரம் இருந்த நிலையில் அவர் தனது சுயவிருப்பத்தின் பெயரில் அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்றார். அப்போதும் ரஜினிகாந்த் வெளியேற விடாமல் தடுத்த நிலையில் பாலம் கல்யாண சுந்தரம் தான் விருப்பத்தோடு வெளியேறினார். இந்த வேளையில் எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்க்கலாம் என்றும் 24 மணி நேரமும் உங்களுக்காக என் வீட்டின் கதவு திறந்திருக்கும் என்று ரஜினிகாந்த் அவரை வழியனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தான் கல்யாண சுந்தரம் இன்று பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications