2 மக்களவை தொகுதிகளுக்கும், 14 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 17-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்!
டெல்லி: வருகிற ஏப்ரல் 17-ம் தேதி 14 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆந்திராவின் திருப்பதி மக்களவை தொகுதிக்கும், கர்நாடகாவில் உள்ள பெல்காம் மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 17 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 64 வயதான ஒய்.எஸ்.ஆர்.சி எம்.பி. பல்லி துர்கா பிரசாத் கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனாவால் உயிரிழந்ததால் திருப்பதி மக்களவை தொகுதி காலியானது.

தொடர்ந்து 4 முறை பெல்காம் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருந்த ம்,முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா காரணமாக மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக இருந்தது. இதேபோல் 11 மாநிலங்களில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 17 ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மிசோரம், ராஜஸ்தான், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications