என்ன பேசிட்டு வந்தாரு? டெல்லிக்கு ஆள் அனுப்பிய எடப்பாடி.. திடீர் நோட்டமோ நோட்டம்? ஓ இதுக்குத்தானா?
டெல்லி: அதிமுகவில் உட்கட்சி மோதல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஒரு பக்கம் பொதுச்செயலர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி நடத்தி முடித்துவிட்டார். இன்னொரு பக்கம் இது தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பிற்காக அவர் தரப்பு காத்துகொண்டு இருக்கின்றது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் இன்று நடக்க வேண்டியது. ஆனால் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டிருக்கிறார். 19ம் தேதி நடந்த வேட்புமனு தாக்கலில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இன்னொரு பக்கம் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் வழக்கும் தொடுத்து இருந்தார் . இந்த வழக்கில் மார்ச் 22ம் தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல்
அதாவது இப்போது தேர்தலை நடத்தலாம். தேர்தல் பணிகளில் உயர் நீதிமன்றம் தலையிடவில்லை. ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்யலாம் என்பது போன்ற கூடுதல் அறிவிப்புகளை வெளியிடவில்லை. தேர்தல் நடக்கும்படி நடக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. எனவே திட்டமிட்டபடி பொதுச்செயலாளர் தேர்தல் பணிகள் நடந்துவிட்டன. ஆனால் தேர்தல் முடிவுகளை மட்டும் வெளியிட வேண்டாம் என்று மட்டுமே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அதில் வேகமான விசாரணையை மேற்கொள்வோம். அந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும்.

மோதல்
24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவில் இந்த மோதல் நிலவும் இதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான புள்ளி ஒருவரை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறாராம். அதன்படி தேர்தல் ஆணையத்தில் தற்போது அதிமுக பொதுக்குழு விவகாரம் உள்ளது. அதாவது அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லுமா செல்லாதா என்பதை இன்னும் தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. இதில் தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையம்
இந்த நிலையில்தான் இது தொடர்பான ஆலோசனைகளை பெற டெல்லிக்கு எடப்பாடி தரப்பு நிர்வாகி ஒருவர் சென்று இருக்கிறாராம். தேர்தல் ஆணையம் இதில் எப்போது முடிவு எடுக்கும், தேர்தல் ஆணையம் நமக்கு சாதகமாக முடிவு எடுக்குமா? எடுக்காதா? என்பது தொடர்பாக ஆலோசனை செய்ய எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை டெல்லி அனுப்பி உள்ளாராம். இதில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முடிவு எடுத்துவிட்டால் பொதுச்செயலாளர் தேர்தல் தொடங்கி சட்டசபை இருக்கை விவகாரம் வரை எல்லாம் முடிவிற்கு வந்துவிடும். அதனால் டெல்லியில் எடப்பாடி நோட்டமிட்டுக்கொண்டு இருக்கிறாராம்.

அண்ணாமலை
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை. சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார்.

நோட்டம்
இதில் உட்கட்சி விவகாரம், அதிமுக - பாஜக மோதல், கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் பற்றி அண்ணாமலை பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக கூட்டணி குறித்து அண்ணாமலை அமித் ஷாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் அண்ணாமலை என்ன பேசினார்.. பாஜக தரப்பில் அதிமுகவை எப்படி பார்க்கிறார்கள்.. நமக்கான சப்போர்ட் இருக்கிறதா என்று எடப்பாடி பழனிசாமி விசாரித்து இருக்கிறாராம். அண்ணாமலை டெல்லிக்கு போய் என்ன சொல்லி இருப்பார் என்பதை விசாரிக்க எடப்பாடி தரப்பு மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications