கியூட்- மாநிலங்களின் உரிமையை பறிக்காது.. அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் பிரதான் கடிதத்தில் உறுதி!
டெல்லி: கியூட் தேர்வால் மாநில உரிமை பறிக்கப்படாது என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கை
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்வேறு நிபுணர்களுடன் விரிவான மற்றும் அதிக பங்கேற்பு கலந்தாய்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அதன்படி 2020 தேசிய கல்விக் கொள்கையின்படி, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

13 மொழிகள்
பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் அதை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய பல்கலைக்கழகங்களில் 13 மொழிகளில் பொது நுழைவுத் தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாறாக இந்த கியூட் தேர்வு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உரிமையை பாதிக்காது.

விண்ணப்பங்கள்
ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனால் ஏழை மாணவர்களின் நிதிச் சுமை குறையும். குறிப்பாக கோச்சிங் சென்று பயிற்சி பெறும் முறையை ஒழிக்கும் நோக்கத்திற்காகவே பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது என விளக்கியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த கியூட் தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்டவைகளை நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லாவற்றிற்கும் நுழைவுத் தேர்வு வைத்தால் பிறகு பள்ளி படிப்பு எதற்கு என மக்களும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பிரதான் விளக்கமளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications