விதிமீறிய பாஜக - காங்கிரஸ்! நட்டா - கார்கேவுக்கு புதிய சிக்கல்.. தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்
டெல்லி: ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேர்தல் விதிகளை மீறி பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக இருகட்சியினரும் மாறி மாறி புகாரளித்த நிலையில் விளக்கம் கேட்டு ஜேபி நட்டா மற்றும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இதில் ஜார்கண்ட்டுக்கு நவம்பர் 13, நவம்பர் 20 என இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் மகாராஷ்டிராவில் நவம்பர் 20 ம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மொத்தமாக நவம்பர் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் வெளியாக உள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தற்போது ஜார்கண்ட்டில் மட்டும் முதற்கட்டமாக 41 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நவம்பர் 20ம் தேதி ஜார்கண்ட்டில் மீதமுள்ள 40 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இருகட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இருகட்சியினர் நட்சத்திர பேச்சாளர்களும் தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் மேற்கொண்டதாக புகார்கள் எழுந்தன.
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் நவம்பர் 11ம் தேதி ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் விதிகளை மீறியதாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்து இருந்தது. அதேபோல் இருமாநிலங்களிலும் நவம்பர் 13ல் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களை விதிகளை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார்களின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் என்பது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு இருதலைவர்களும் விளக்கம் அளிப்பதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications