டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒற்றுமை யாத்திரை..குழந்தைகளுடன் ராகுல் செல்பி! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார் -காங்கிரஸ் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஒற்றுமை யாத்திரையில் குழந்தைகளுடன் ராகுல் காந்தி நடைபயணம் சென்றதற்கு எதிராக தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். தற்போது அவர் கர்நாடகாவில் நடைபயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

“தீண்டாமை”.. ஊரைவிட்டு ஒதுக்கிய “சாதி” வெறியர்கள்! தலித் குடும்பத்தை யாத்திரை அழைத்துச் சென்ற ராகுல்“தீண்டாமை”.. ஊரைவிட்டு ஒதுக்கிய “சாதி” வெறியர்கள்! தலித் குடும்பத்தை யாத்திரை அழைத்துச் சென்ற ராகுல்

பயணம்

பயணம்

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.

கர்நாடகாவில் யாத்திரை

கர்நாடகாவில் யாத்திரை

கன்னியாகுமரியில் தொடங்கி, கேரளாவின் பல மாவட்டங்கள் வழியாக 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, மீண்டும் கடந்த 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த ராகுல் காந்தி, அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

கவனம் ஈர்க்கும் ராகுல்

கவனம் ஈர்க்கும் ராகுல்


கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்தும் கூட்டங்களில் பேசியும் வருகிறார். இதேபோல் பல்வேறு தரப்பட்ட மக்களுடன் ராகுல் காந்தி நடந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியினரால் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

 குழந்தைகள்

குழந்தைகள்

குறிப்பாக கன்னியாகுமரி தொடங்கி தற்போது கர்நாடகா வரை பல பகுதிகளில் ராகுல் காந்தியுடன் குழந்தைகளும் நடை பயணத்தில் பங்கேற்றனர். இதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

 தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரை தொடர்ந்து தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "NCPCR இன் தலைமை பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். - பாஜக செயற்பாட்டாளர் உள்ளார். அந்த புகாரில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. ராகுல் காந்தியின் யாத்திரையில் ஏராளமானோர் குடும்பத்தோடு கலந்துகொள்ள வரும்போது குழந்தைகள் செல்பி எடுக்க விரும்புவது சட்டவிரோதம் இல்லை." என்றார்.

English summary
The Election Commission has issued a notice to the Congress party following a complaint filed by the National Commission for Protection of Child Rights against Rahul Gandhi walking with children during the Unity Yatra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X